அனைவரையும் அரவணைத்த ஸ்ரீ ராமானுஜர் | Freedom75 | சுதந்திரம்75

அனைவரையும் அரவணைத்த ஸ்ரீ ராமானுஜர் | Freedom75 | சுதந்திரம்75

Share it if you like it

ஸ்ரீ ராமானுஜர்

புகழ் பெற்ற வைணவ ஆச்சார்யார்களுள் முதன்மையானவர்,  ஸ்ரீ ராமானுஜர். கி.பி. 1017ல், ஸ்ரீ பெரும்புதூரில் பிறந்தார். இவரது தந்தை – ஆருலகேசவ சோமயாகி, தாய் – காந்தி மதி அம்மையார்.

தனது தந்தையிடமே வேதங்களை எல்லாம் கற்று வந்தார்.

16-ம் வயதில், தனது தந்தையை இழந்தார். 17 வது வயதில், தஞ்சம்மாளை திருமணம் செய்தார். பின்பு யாதவப் பிரகாசர் என்பவரிடம், பாடங்களை கற்றார்.

இவ்வுலகில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவர்குள்ளும், இறை சக்தி உள்ளது. அது எல்லோருக்கும் வெளிப் படுவது இல்லை என்றாலும், ஒரு சிலருக்கு அவ்வப் போது, இந்த பூமியில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது, மறுக்க முடியாது. அந்த வகையில், ஸ்ரீராமானுஜர் இவ்வுலகில் செய்த மிகப் பெரும் தியாகம் என்ன தெரியுமா?

கோடிக்கணக்கான மனிதர்களில், ஒரு சிலர் மட்டுமே தெய்வமாகவே போற்றப் படுகிறார்கள். அந்த வரிசையில், ஸ்ரீராமானுஜர் 1017ஆம் ஆண்டு, வளர்பிறை பஞ்சமி திதி, திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார். தனது 120 ஆவது வயதில் உயிர் நீத்தார். எனினும் மறுநாளே அவ்வுடல் மேலெழுந்து வந்தது, அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

தியானத்தில் அமர்ந்த அவருடைய திருமேனிக்கு, சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில், குங்குமப் பூ, பச்சை கற்பூரம் கொண்டு செய்யப் பட்ட தைலம் பூசப் படுகிறது. ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில், இவருக்கு முதல் வழிபாடு நடந்த பிறகே, ரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ ராமானுஜர், பக்தர்கள் வேண்டிய வரங்களை வாரி வழங்க கூடியவராக இருக்கிறார்.

இவர் இவ்வளவு சிறப்புகள் பெற என்ன காரணம் தெரியுமா?

பல அலைச்சல்களுக்கு பிறகு, திருகோஷ்டியூர் நம்பி என்ற குருவால், உபதேசம் பெற்றவர்  ராமானுஜர். அவருடைய குருவானவர், இந்த மந்திர உபதேசத்தை வேறு யாரிடமும் கூறக் கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் இவ்வுலகம் பயனடைய வேண்டி, தான் நரகம் சென்றாலும் பரவாயில்லை என, அந்த மந்திரத்தை பக்தர்கள் அனைவருக்கும், தன்னுடைய உரத்த குரலில் பகிரங்கப் படுத்தினார்.

அது என்ன மந்திரம் தெரியுமா?

இவ்வுலகில் சக்தி வாய்ந்த மந்திரங்களில் ஒன்றான எட்டெழுத்து மந்திரம் ஆக இருக்கும், “ஓம் நமோ நாராயணாய” என்னும் திருமாலின் சக்தி மந்திரம் ஆகும். ‘ஓம் நமோ நாராயணாய’ என, எவர் ஒருவர் உச்சரித்தாலும், அவருக்கு வரும் இன்னல்கள் யாவும், மலை போல் வந்தாலும், பனி போல் விலகும் என்பது, நம்பிக்கை. இம்மந்திரத்தை, பக்தர்களுக்கு தன் குருவையும் மீறி, வெளி உலகிற்கு கூறியதால், அவர் நரகம் செல்வார் என்று சாபங்கள் உண்டானது.

எனினும் அவர் தன் கடைசி காலம் வரை, வைணவ குலத்திற்கு தொண்டுகள் செய்தே, மோட்சம் பெற்றார். ஜாதி, மத ஏற்றத் தாழ்வுகளை களைய, மேலக்கோட்டை திருநாராயணபுரத்தில், பட்டியலின மக்களை கோவிலுக்குள் வரவழைத்து, புரட்சி செய்தார். ஹரியும், சிவனும் ஒன்று என்பதை, இவ்வுலகிற்கு அறிவுறுத்தினார்.

ஸ்ரீ ராமானுஜருக்கு, பெருமாளே சீடனாக பணிபுரிந்த காலங்களும் உண்டு. இதனை மெய்ப்பிக்கும் வண்ணம், திருக்குருங்குடி அழகிய நம்பி பெருமாள் கோவிலில் காதுகளில் பூவும், நெற்றியில் திருநாமம்  பக்தர்களுக்கு இன்றும் அருள் பாலிக்கின்றார். இக்கோவிலில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பரிவட்டப்பாறை அமைந்து இருக்கும்.

திருவனந்தபுரத்தில் பூஜை முறைகளை சீர்திருத்த நினைத்த ஸ்ரீ ராமானுஜரை பெருமாள் கருடனை அனுப்பி, இவ்வாறு செய்ததாகக் குறிப்பிடப் படுகிறது. ரங்கநாதர் கோவில் பூஜை முறைகள் இன்றும்  நிறைந்து இருக்கும், உண்மையான குரு கிடைக்க, இங்கு வந்து வழிபட்டு செல்லலாம்.

  • ராதா சௌந்தரி

Share it if you like it