திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூட்டணி கட்சிகளை குறித்து என்று கருத்து தெரிவித்தாரோ.. அன்றிலிருந்து இன்று வரை திமுகவில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது என்பது நிதர்சனம்..
வைகோ, அபுபக்கர், உட்பட பலரும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.. உதயசூரியன் சின்னத்தில் நிற்க மாட்டோம் என்று அதிரடியாக கருத்து தெரிவித்தது.. காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது..
- கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த சில தீய சக்திகள் இறங்கியுள்ளதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் அண்மையில் அலறியது..
- அழகிரி தனிக்கட்சி தொடங்க போவதாக மிரட்டல்…
- வர உள்ள 2 ஜி வழக்கின் தீர்ப்பு…
- பி.கே- மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ஆதிக்கம் என்று தி.மு.க தற்பொழுது தள்ளாடி வருகிறது..
இந்நிலையில் வி.சி.க தலைவர் திருமாவளவன் இவ்வாறு கூறியுள்ளார்…
”தேர்தலில் ஜெயிக்கலாம்; தோற்கலாம்’ தேர்தலில் தோற்றாலும், மூலையில் முடங்கி விட மாட்டோம்; சமூக நீதியைக் காக்க தேர்தல் அரசியலில் இருந்து விலகவும் தயார்..
அதிக தொகுதிகளை கேட்டு ஸ்டாலினை மிரட்டவும்.. தி.மு.க-விடம் அதிக நெருக்கம் காட்டும் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமாரை மறைமுகமாக கண்டிக்கவும்… திருமாவளவன் போடும் நாடகம் இது என்று அரசியல் நோக்கர்கள் முதல் நெட்டிசன்கள் வரை கருத்து தெரிவித்து வருகின்றனர்…
இப்ப திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியே வந்துவிட்டால் அப்ப அதுவும் BJP-B டீமா கோபால். pic.twitter.com/N7OYtOfvRl
— Super Kamal 🔦🔦 (@b_rajsrini) December 27, 2020
என்ன ஆச்சு திமுகவிடம் இருந்து எம்எல்ஏ சீட்டு கிடைக்கவில்லையா?
அப்படியே சீட்டு கிடைத்தது தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவர்கள் திமுக எம்எல்ஏக்கள் தான் இப்போது இருக்கும் திமுக எம்பி ரவிக்குமார் உட்பட.
திருமா மட்டுமே விசிக எம்பி. அப்புறம் எங்க இருக்க கட்சி
— தகடூர் .கோ . மயில்வாகணன் (@Mayilvaganan01) December 26, 2020
ஏன் சார் எவ்வளவு கால நக்குனாலும் 2 சீட்டுக்கு மேல தரலையா..
மக்கள் புறக்கணித்து விடுவார்கள் தேர்தல் களத்தில்.. உங்கள் கூட்டணி ஜால்ராக்களை பார்த்து..
— RYF Yesudoss 🤘 ᴬᴺᴺᴬᴬᵀᵀᴴᴱ🤘 (@yesu_charu) December 27, 2020
கடைசியா இது தான் நடக்கப்போகுது… திமுகவை நம்பி வீணாகப்போன பல கட்சிகள் இதற்கு உதாரணம்…
— Sridhar (@Sridhar32553783) December 27, 2020
திமுக கூட்டணியில் திருகுதாளங்களைச் செய்யும் சபலத்துடன் சில சக்திகள் இறங்கியிருப்பது எந்தப் பலனையும் தராது.
2021 தேர்தலை நோக்கி வீறுநடை போடும் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த எத்தனிப்பவர்கள் கலகலத்துப் போவார்கள்!
பாதையும் பயணமும், தெளிவும் திட்பமும் வாய்ந்தவை! கவனம் சிதறாது! pic.twitter.com/6RCvH5J4aW
— M.K.Stalin (@mkstalin) October 12, 2020