தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவிக்க வந்த சிவன் வேடமணிந்தவரின் கையை ஸ்டாலின் தட்டி விட்ட விவகாரம் ஹிந்துக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், மேற்கண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
தி.மு.க. என்றாலே ஹிந்துக்களுக்கு விரோதமான கட்சி என்பது அனைவரும் அறிந்ததுதான். இதை மெய்ப்பிக்கும் வகையில் நேற்று ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான ஸ்டாலின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவிக்க சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் குவிந்திருந்தனர். இவர்களை ஒருவர் பின் ஒருவராக வரிசையாக அனுப்பி வைத்தனர் நிர்வாகிகள்.
ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவிக்க சிவன் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்த நாடகக் கலைஞர்கள் சிலரும் வரிசையில் காத்திருந்தனர். மேலும், ஈரோடு வெ.ராமசாமி உள்ளிட்ட திராவிட இயக்கத்தினரைப் போல வேடமணிந்த பலரும் வந்திருந்தனர். இந்த சூழலில், ஈரோடு ராமசாமி வேடமணிந்தவர் உள்பட பல்வேறு தரப்பினர் கொடுத்த பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்ட ஸ்டாலின், அவர்கள் தனது கையை தொட்டு வாழ்த்துத் தெரிவித்ததை ஏற்றுக்கொண்டார். ஆனால், சிவன் வேடம் அணிந்தவர் வாழ்த்துத் தெரிவித்து கையை தொட முயன்றபோது, தனது கையை பின்னால் இழுத்துக் கொண்ட ஸ்டாலின், அந்த நபரை அங்கிருந்து செல்லும்படி கையால் சைகை காட்டினார். இதனால், அந்த நபர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும், ஹிந்து தெய்வங்களை அவமதிப்பது, இழிவாகப் பேசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுவரும் ஸ்டாலின், தற்போது ஹிந்து கடவுள் வேடமணிந்தவர்களிடம் கூட தனது வெறுப்பைக் காட்டி இருக்கிறார். இது ஹிந்துக்கள் மற்றும் ஹிந்துக் கடவுள்கள் மீதான வன்மத்தையே காட்டுகிறது என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.