தி.மு.க தலைவர் ஸ்டாலின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, தேர்தல் முடிவுகள் வருமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதனை தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை அண்மையில் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், தி.முக தலைவர் ஸ்டாலின். திடீர் என்று தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள். ஒவ்வொருவரையும் சென்னைக்கு அழைத்து. தி.மு.க.,விற்கு வெற்றி வாய்ப்பு எப்படி? உள்ளது. மக்களின் மனநிலை என்ன? உள்ளிட்ட பல விஷயங்களை கலந்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் தி.மு.க.,விற்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார்களா. என்பது பற்றியும் கேட்டறிந்தாக செய்திகள் வெளியாகி உள்ளன. பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், ஆகியோரை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.
ஒருவேளை தி.மு.க ஆட்சியை, பிடிக்க முடியவில்லை என்றால். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மாற்று கட்சிக்கு ஓடி விட கூடாது. என்பதற்காக தான் தி.மு.க தலைவர் வேட்பாளர்களை சந்தித்து பேசியதாக அரசியல் நோக்கர்கள் முதல் நெட்டிசன்கள் வரை கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.