பிரஷாந்த் கிஷோர் நடத்திய சர்வே பகீர் தகவல்கள் அம்பலம்..!

பிரஷாந்த் கிஷோர் நடத்திய சர்வே பகீர் தகவல்கள் அம்பலம்..!

Share it if you like it

மேற்கு வங்க முதல்வர் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு அரசியல் ஆலோசகராக பிரஷாந்த் கிஷோர் பணியாற்றி வருவது அனைவரும் அறிந்ததே. கிஷோர் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில் அரசியல் ஆலோசகர் கூறியதாவது.

  • மேற்கு வங்க மாநிலத்தில், பல ஆண்டுகளாக காங்கிரஸ், இடதுசாரிகள், மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், ஆகியவை முஸ்லிம் மக்களை திருப்திப்படுத்தியே தங்கள் அரசியலையே மேற்கொண்டு உள்ளனர்.
  • மேற்கு வங்க இந்துக்கள் தங்களை மதிக்கும் ஒரு கட்சியாக பா.ஜ.க இருப்பதாக தற்பொழுது உணர்ந்து உள்ளனர்.
  • பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காளத்தில் மிகவும் பிரபலமான தலைவராக மாறியுள்ளார். “எங்கள் ஆய்வுகளின் படி, மோடி மேற்கு வங்காள வாக்காளர்களிடையே மிகவும் பிரபலமாக இருப்பதை அறிந்து கொண்டோம்.
  • பெரும்பாலான சாதியினர் பா.ஜ.க.,வுக்கே வாக்களித்து வருகின்றனர்.
  • பா.ஜ.க.,வுக்கு வாக்குகள் கிடைப்பது, மோடி மற்றும் இந்து மக்களே.
  • சுவேந்து அதிகாரியின் வெளியேற்றம் மிக முக்கிய காரணம்.
  • பெரும்பான்மையான கருத்து என்னவென்றால், பா.ஜ.க அரசு அமைக்கும்
  • “யாருக்கு வாக்களிக்கிறோம், யார் அரசாங்கத்தை உருவாக்குகிறார்கள். என்பதை அறிய நாங்கள் ஒரு ஆய்வை நடத்தினோம். எங்கள் கணக்கெடுப்பில், பாஜக அரசாங்கத்தை உருவாக்குகிறது என்பதைக் கண்டறிந்தோம்.
  • இடதுசாரிகள் சுமார் 15% வாக்குகளைப் பெறுவார்கள். இடதுசாரிகளுக்கு வாக்களித்தவர்களில் 2/3 பேர் பாஜக ஆட்சிக்கு வருவார்கள் என்று கூறுகிறார்கள். எனவே, பாஜக அரசாங்கத்தை அமைக்கும் என்பது பெரும்பான்மை கருத்து.
  • சுமார் 50-55% இந்துக்கள் பா.ஜ.க.,வுக்கு வாக்களிப்பார்கள்.
  • மம்தா பானர்ஜிக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் எதிர்ப்பு உள்ளது. நரேந்திர மோடிக்கு எதிராக எந்த எதிர்ப்பு உணர்வும் இல்லை என்று பிரஷாந்த் கூறியதாக அந்த ஆடியோவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Image

 

Image

 

 


Share it if you like it