முதல்வர் ‘கொலை’ பதிவு… உதயநிதி, அன்பில் மகேஷ் ‘ஷாக்’: டுபாக்கூர் சவுக்கு சங்கருக்கு ‘செக்’!

முதல்வர் ‘கொலை’ பதிவு… உதயநிதி, அன்பில் மகேஷ் ‘ஷாக்’: டுபாக்கூர் சவுக்கு சங்கருக்கு ‘செக்’!

Share it if you like it

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், அமைச்சர் அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலினை சித்திரித்து டுபாக்கூர் சவுக்கு சங்கர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவு தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கம்பு சுற்றி வருபவன் சவுக்கு சங்கர். தமிழக காவல்துறையில் அமைச்சுப் பணியாளராக (அதாங்க எடுபிடி) வேலை பார்த்துக் கொண்டிருந்தவன், உயர் அதிகாரிகள் பேசுவதை ஒட்டுக் கேட்பது, குடித்து விட்டு கும்மாளமடிப்பது, பொறுக்கித்தனமாக பெண்களிடம் சில்மிஷம் செய்வது என்பன போன்ற சில்லரை வேலைகளில் ஈடுபட்டு வந்தான். இதன் காரணமாக, காவல்துறை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டான். இதன் பிறகு, தன்னை பணி நீக்கம் செய்த போலீஸ் அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கில் இல்லாததையும், பொல்லாததையும் சமூக வலைத்தளங்களில் பரப்பிவிட்டான்.

அதேபோல, போலீஸ் அதிகாரிகளாக இருந்தாலும் சரி, தமிழக முதல்வராக இருந்தாலும் சரி, வாய்க்கு வந்தபடியெல்லாம் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதோடு, போடா வாடா என்று மரியாதைக்குறைவாகவும், சில தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியும் விமர்சித்து வந்தான். இதனால், இவன் ஏதோ தமிழகத்தை மீட்க வந்த மிகப்பெரிய போராளி என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், இவன் ஒரு டுபாக்கூர் என்பதும், கூலிக்கு மாறடிக்கும் கொத்தடிமை என்பதும் யாருக்கும் தெரியாது. இப்படித்தான் 2006 – 2011 தி.மு.க. ஆட்சியின்போது ஸ்டாலின், கருணாநிதி ஆகியோரை பற்றி தரக்குறைவாக பதிவு போட்டு சிறையில் தள்ளப்பட்டான்.

சிறையில் கொடுக்கப்பட்ட தரமான ட்ரீட்மென்ட்டுக்குப் பிறகு, தி.மு.க.வினரை விமர்சிப்பதை மட்டும் அடக்கி வாசித்து வந்தான். மற்ற கட்சியினரை வழக்கம்போல போடாவாடாதான். ஆனால், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், ஆட்சியாளர்கள் யாரும் இவனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதாவது, இவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. சூரியனைப் பார்த்து தெருநாய் குலைப்பதுபோல இவன் மட்டும் குரைத்துக் கொண்டே இருந்தான். கடந்த சில வருடங்களாக பா.ஜ.க. தலைவர்களை பார்த்து குரைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால், அ.தி.மு.க.வினரைப் போல பா.ஜ..க.வினரும் இவனை ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை.

இந்த தைரியத்தில் பிரதமர் மோடியை பற்றியும், அவரது தாயை விமர்சித்தும் சமீபத்தில் அருவெறுக்கத்தக்க வகையில் ஒரு பதிவை போட்டிருந்தான். எனவே, இவனது கொட்டத்தை அடக்க முடிவு செய்து பா.ஜ.க. தரப்பில் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இப்புகார் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில்தான், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும், அமைச்சர் அன்பில் மகேஷையும், முதல்வர் ஸ்டாலின் மகனும், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினையும் கொலைகாரர்களாக சித்தரித்தும் ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருக்கிறான். இதுதான் தி.மு.க.வினர் மட்டுமன்றி தமிழக மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அப்பதிவில், 2023 வரை பொறுப்பானுங்களா, இல்ல போட்டுத் தள்ளிருவானுங்களா என்று உதயநிதி ஸ்டாலினையும், அமைச்சர் அன்பில் மகேஷையும் மறைமுமாக குறிப்பிட்டிருப்பவன், ரெண்டு பேரும் ஜோடியா என்னை ப்ளாக் பண்ணிருக்கானுங்க. கொஞ்சம் டேக் பண்ணி விடுங்க என்று பதவிட்டு விட்டு, உதயநிதி, மகேஷ் கலந்துகொண்ட ஒரு வீடியோவையும் அட்டாச் பண்ணி இருக்கிறான். மேலும், இந்தப் பதிவில் முதல்வர் ஸ்டாலினை டேக் செய்திருப்பவன், 2023 வரையாவது என்று இக்கன்னா வைத்திருக்கிறான். இதுவும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, ஏற்கெனவே உதயநிதி ஸ்டாலினை போடா மயிறு என்று சொல்லி பதிவிட்டிருக்கிறான். இதனால் இவன் மீது தி.மு.க.வினர் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். ஆகவே, இவன் விரைவில் கைது செய்யப்படுவது உறுதி என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். அதேசமயம், ஓவரா ஆட்டம் போடுறவன் ஒருநாள் வீட்டில் முடங்கிக் கிடப்பான் என்று கிராமத்துப் பக்கம் பழமொழி சொல்வார்கள். அதுபோல, ஓவராக ஆட்டம் போடும் சவுக்கு சங்கரின் ஆட்டத்தை ஆண்டவன் அடக்கும் காலம் விரைவில் இல்லை என்கிறார்கள் சமுக வலைத்தளவாசிகள். ஆடிய ஆட்டமென்ன, பேசிய வார்த்தை என்ன என்றொரு பாடல்வரிகள்கூட உண்டு.


Share it if you like it