குயிலி யார்… வேலு நாச்சியார் யார்? வித்தியாசம் தெரியாத சீன ஸ்லீப்பர் செல் எம்.பி.!

குயிலி யார்… வேலு நாச்சியார் யார்? வித்தியாசம் தெரியாத சீன ஸ்லீப்பர் செல் எம்.பி.!

Share it if you like it

குயிலி யார், வேலு நாச்சியார் யார் என்கிற வித்தியாசம் தெரியாமலேயே தமிழகத்தில் பலரும் மக்கள் பிரதிநிதியாக இருக்கிறார்கள் என்பதுதான் தமிழ் ஆர்வலர்களின் வேதனை!

ஆம். கம்யூனிஸ சித்தாந்தத்தைக் கொண்டவர்களுக்கு தமிழகத்தின் வரலாறும், தமிழ் மண்ணின் வரலாறும், தமிழக மன்னர்களின் வரலாறும் எப்படித் தெரியும்? கம்யூனிஸம் என்பது வளம் நிறைந்த நாடுகளை கைப்பற்றுவதற்கு உருவாக்கப்பட்ட காலனீய சிந்தனையுடைய சித்தாந்தம். 1950 முதல் 70-கள் வரையில் சோவியத் யூனியன் கம்யூனிஸ சித்தாந்தத்தை வைத்து பல நாடுகளை கைப்பற்ற முயற்சித்தது. இதற்கு ஆரம்பத்தில் வரவேற்புக் கிடைத்தாலும், காலப்போக்கில் கம்யூனிஸ சித்தாந்தம் வீணாப் போனது என்பதை மக்களும், நாடுகளும் புரிந்துகொண்டன. எனவே, அச்சித்தாந்தத்தை நிராகரித்துவிட்டு, தங்களது பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்குத் திரும்பிவிட்டார்கள். இதன் காரணமாக ரஷ்யாவின் செல்வாக்கு உலக நாடுகள் மத்தியில் சரிந்தது.

இதையடுத்து, கம்யூனிஸ சித்தாந்தத்தை ரஷ்யா தூக்கி எறிய, அந்த துவைக்காத உள்ளாடையை சீனா எடுத்து மாட்டிக் கொண்டது. தற்போது அதே கம்யூனிஸ கொள்கையை வைத்து வளம் நிறைந்த நாடுகளை கையகப்படுத்த சீனா மும்முரமாக முயற்சித்து வருகிறது. இந்தப் பணியைச் செய்வதற்கு பல நாடுகளில் வசிக்கும் ஆசையும், பேராசையும் கொண்ட நபர்களை தேர்ந்தெடுத்து தங்களது ஸ்லீப்பர் செல்களாக மாற்றி அசைன்மென்ட் கொடுத்து வருகிறது. அப்படித்தான் இந்த ஸ்லீப்பர்கள் செல்கள், இந்தியாவில் தொழிற்சாலைகள் முன்னேறி வரும் இந்த நேரத்தில், சிகப்புக் கொடியுடன் வந்து தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தி, நாட்டின் முன்னேற்றத்தை தடுப்பது. நாட்டு வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் நல்ல பல திட்டங்களை கொண்டு வரும்போது பொய்களின் மூலம் மக்களை குழப்பி, அத்திட்டத்திற்கு எதிராக திசை திருப்பி விடுவது போன்ற இரண்டாம்தர பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

இதுபோன்ற ஸ்லீப்பர் செல்களில் ஒருவராக கருதப்படுபவர்தான் சு.வெங்கடேசன். இவர், தற்போது தமிழகத்தின் ஒரு பாராளுமன்றத் தொகுதியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருக்கிறார். வாழ்க்கையில் நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும். அதுபோலதான் இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதும். ஆகவே, இதை நினைத்து நாம் கவலைப்பட வேண்டாம். இவர், மக்கள் மத்தியில் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள அவ்வப்போது டுவிட்டரில் வந்து கம்பு சுற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில், குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்து விட்டது என்ற பொய்யை கட்டவிழ்த்துவிட்ட, குடியரசு தினத்துக்கும் சுதந்திர தினத்துக்கும் வித்தியாசம் தெரியாத மாநில அரசுக்கு முட்டுக் கொடுக்கும் வகையில் மீண்டும் டுவிட்டரில் கம்பு சுற்றி இருக்கிறார் சு.வெங்கடேசன்.

ஆனால் பாவம், ஏடாகூடமாக சுற்றியதால் அந்த கம்பு அவர் கண்ணையே குத்திவிட்டது. ஆம், வேலு நாச்சியாரை மத்திய அரசு அவமானப்படுத்தி விட்டதாகக் கூறி அவர் பதிவிட்டிருந்த டுவிட்டர் பதிவில், வேலு நாச்சியாருக்கு பதில் குயிலியின் புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கிறார். இதைப் பார்த்த தமிழகத்தைச் சேர்ந்த தேசிய எண்ணம் கொண்ட பலரும், ‘தோழரே உங்கள் பதிவுகளை காரல் மார்க்ஸ், லெனின் போன்ற அந்நிய அயோக்கியர்களுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். எங்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம்’ என்று தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். பாவம், வெங்கடேசன் ஆர்.எஸ்.எஸ். ஷாகாவுக்கு சென்றிருந்தால் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய சாமானிய புரிதலாவது இருந்திருக்கும். ஆனால், கம்யூனிஸ் அலுவலகத்திற்கு சென்று விட்டதால் இதெல்லாம் எப்படித் தெரியும்?!


Share it if you like it