சூடான் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய இந்தியா: நாட்டு மக்களை மீட்பதில் பா.ஜ.க. காட்டிய அக்கறை!

சூடான் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய இந்தியா: நாட்டு மக்களை மீட்பதில் பா.ஜ.க. காட்டிய அக்கறை!

Share it if you like it

உள்நாட்டுப் போர் நடந்து வரும் சூடானில், அந்நாட்டு ராணுவத்தின் கண்ணில் மண்ணை தூவி 121 இந்தியர்களை பத்திரமாக மீட்டு வந்திருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. இந்த புதிய தகவல் தற்போது வெளியாகி நாட்டு மக்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.

சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு ராணுவ தளபதியின் படையினருக்கும், துணை ராணுவ தளபதியின் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் உள்நாட்டுப் போராக வெடித்து, அந்நாட்டு மக்களுக்கும், அந்நாட்டில் வாழும் வெளிநாட்டு மக்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, ஒவ்வொரு நாடும் சூடானில் உள்ள தங்கள் நாட்டு மக்களைக் காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, “ஆப்ரேஷன் காவேரி” என்கிற பெயரில் சூடான் மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. இதற்காக சவூதி அரபியா நாட்டுடன் இந்தியா கைகோர்த்து, தலைநகர் ஜெட்டா விமானத் தளத்தில் இந்திய விமானப் படையின் பேஸ் கேம்ப் அமைத்து மீட்புப் பணிகளை செய்து வருகிறது. அதாவது, சூடான் நாட்டிலிருந்து இந்திய மக்களை கப்பலில் ஏற்றி சவூதி ஆரேபியாவின் ஜெட்டாவிற்கு கொண்டு வந்து, அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வருவதான் திட்டம்.

இந்த சூழலில்,, சூடான் தலைநகர் காஹர்தூம் பகுதியில் சுமார் 121 இந்தியர்கள் கடல் பகுதிக்கு வர முடியாத நிலையில் சிக்கித் தவித்தனர். இது குறித்து அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்குத் தகவல் தெரியவந்தது. பின்னர், இத்தகவல் மீட்புப் படையினருக்கு தெரிவிக்கப்பட்டது. எனவே, இவர்களை மீட்க ஒரே வழி விமானம்தான் என்று மீட்புப்படையினர் முடிவு செய்தனர். ஆனால், உள்நாட்டுப் போர் நடக்கும் இந்த சூழ்நிலையில் விமானத்தை தரையிறக்க சூடானிடம் அனுமதி வாங்க முடியாது. ஆகவே, விமானப் படையினர் சூடானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அந்நாட்டில் பயன்படுத்தப்படாத விமான ஓடுபாதை ஒன்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சூடானுக்கு தெரியாமலேயே அந்த ஓடுபாதையில் விமானத்தைத் தரையிறக்கி மக்களை மீட்க முடிவு செய்தனர். ஆனால், அந்த ஓடுபாதை பயன்படுத்தப்படாமல் இருந்ததால், விமானத்தை தரையிறக்க ஒளி விளக்குகள் கிடையாது. அதேசமயம், பகல் நேரத்தில் விமானத்தில் பறந்தால், அந்நாட்டுப் படையினர் கண்டுபிடித்து விமானத்தின் மீது தாக்குதல் நடத்தக்கூடும். எனவே, இரவு நேரம்தான் ஒரே சாய்ஸ் என்பதால், இப்பணிக்காக இந்திய விமானப் படையின் சி-130 ரக ஹெவி லிஃப்ட் விமானத்தை பயன்படுத்த முடிவு செய்தனர். இதற்காக இந்திய விமானப் படையினர் விமானத்தில் உள்ள எலெக்ட்ரோ ஆப்டிக்கல் இன்ஃப்ரா ரெட் சென்சாரை பயன்படுத்தினர்.

மேலும், இதன் விஷனை காண பிரத்தியேக நைட் விஷன் கண்ணாடிகளை பயன்படுத்தினர். இதை பயன்படுத்தி ஓடுபாதையில் எந்தவித தடுப்புகளும் இல்லை என்பதை உறுதி செய்து விமானத்தை தரையிறக்கினர். முன்னேற்பாடாக மேற்கண்ட 121 இந்தியர்களையும் விமான ஓடுபாதைக்கு வரவழைத்து விட்டனர். பின்னர், விமானம் தரையிறங்கிய 7 நிமிடத்திற்குள் 121 பேரையும் விமானத்தில் ஏற்றிக்கொண்டு, விமானம் அங்கிருந்து புறப்பட்டு ஜெட்டாவிற்கு வந்து சேர்ந்து விட்டது. இதன் பிறகே, இந்திய விமானம் வந்து சென்ற விவரம் சூடான் நாட்டிற்கு தெரியவந்தது.

இப்படி தங்களது நாட்டு மக்களை சாகச முறையில் காப்பாற்றியது வெகு சில நாடுகளே. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்திருக்கிறது. இந்திய விமானப்படை விமானிகளின் இச்சாதனையை மத்திய பா.ஜ.க. அரசும், மக்களும் பாராட்டி வருகின்றனர். அதேசமயம், சில தேசவிரோத சக்திகளோ மத்திய அரசை குறைகூறி வருகின்றனர். அதாவது, இவ்வளவு கஷ்டப்பட்டு மக்களை காப்பாற்றி இருக்கிறது பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு. ஆனால், மக்களை ஏ.சி. இல்லாத விமானத்தில், ஆடுமாடுகளைப் போல அடைத்து கொண்டுவந்ததாக இங்கிருக்கும் தேசவிரோதிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.


Share it if you like it