காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பே இறுதியானது – தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பே இறுதியானது – தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

Share it if you like it

நடப்பு ஆண்டில் தமிழகத்தில் காவிரி ஆற்றில் இருந்து இதுவரை கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை. அணையில் போதிய நீர் இருப்பு இல்லை .மழை பொய்த்த காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் நீர்வரத்து இல்லாத காரணத்தால் கர்நாடகாவில் அணைகள் நீர் போதுமான அளவு இல்லை .அதனால் இந்த வருடம் காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுத்து கைவிரித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பதிலளித்த தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுத்துள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீதிமன்றம் வாயிலாக தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். ஆனாலும் காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பே இறுதியானது என்று குறிப்பிட்டுள்ளார். கர்நாடகாவில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் – திமுக மாநில மற்றும் தேசிய அளவில் நெருங்கிய கூட்டணி கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it