இந்திய தேசிய லீக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தடா ரஹிம் ஹிந்து பண்டிக்கையான தீபாவளி குறித்து தெரிவித்த கருத்திற்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் வர்மா தக்க பதிலடியை அவருக்கு கொடுத்து உள்ளார்.
பா.ஜ.க, மத்திய அரசு, மோடி, ஆர்.எஸ்.எஸ், மற்றும் ஹிந்து அமைப்புகள் மீது தொடர்ந்து வன்மம் நிறைந்த கருத்துக்களையும், பா.ஜ.க பெண் நிர்வாகிகளையும், மிகவும் கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும், விமர்சனம் செய்யும் நபர்களில் தடா ஜெ ரஹிம் அவர்களும் ஒருவர். கட்சி வேறுபாடு, கொள்கை வேறுபாடு, என்பதை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் பா.ஜ.க-வை சேர்ந்த பெண்களை விமர்சனம் செய்பவர் தடா ரஹிம்.
இந்நிலையில் ஆபாச பேச்சாளர் தடா தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிந்து பண்டிக்கையான தீபாவளி குறித்து இவ்வாறு பதிவு செய்து உள்ளார்.
- முஸ்லீம்கள் பட்டாசு வெடிக்க கூடாது என போஸ்டர் போட்டால் நல்லது ..
- அதே போன்று முஸ்லிம் வியாபாரிகள் பட்டாசு விற்பனை செய்ய கூடாது என போஸ்டர் போட்டால் நல்லது..
- குர்ஆன் வசனங்களை பின்பற்றும் நபர்களுக்கு இந்த ஆலோசனை கூறலாம்..
- இதை வைத்து சிலர் மதவாத அரசியல் செய்வார்கள் ஜாக்கிரதை..
ஹிந்துக்கள் கொண்டாடும் தீபாவளி பண்டிக்கைக்கு வாழ்த்து கூறாமல் மீண்டும் ஹிந்து உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தனது எண்ணத்தை வெளிப்படுத்திய தடா ஜெ ரஹிமிற்கு தக்க பதிலடியை கார்ட்டூன் மூலம் கொடுத்து உள்ளார் பிரபல கார்ட்டூனிஸ்ட் வர்மா..
முதல் படம்
பட்டாசு வெடிப்பது இஸ்லாத்தின் படி பாவம் என்று இஸ்லாம் மதத்தை சேர்ந்த தந்தை ஒருவர் தனது குழந்தைகளை கண்டிக்கிறார்.. அப்பொழுது அவருடைய குழந்தை தந்தையை பார்த்து தாங்கள் பிற்போக்குவாதியா என்று கேள்வி எழுப்புகிறது.
அடுத்த படம்
ஹிந்து ஒருவர் பட்டாசு வாங்க ஹிந்து கடையை நோக்கி செல்வது போலவும் அதற்கு அந்த இஸ்லாமியர் நீ ஒரு வகுப்புவாதி என்றும் கட்டாயம் நீ ஆர்.எஸ்.எஸ்-காரன் தான் என்று கூறி விமர்சனம் செய்கிறார்.