ஹிந்து முறைப்படி திருமணம் செய்துக்கொண்ட தைவான் தம்பதியினர் !

ஹிந்து முறைப்படி திருமணம் செய்துக்கொண்ட தைவான் தம்பதியினர் !

Share it if you like it

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சித்தர்புரத்தில் ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது. சிறப்புமிக்க இந்த சித்தர் பீடத்தில் பவுர்ணமி தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதில் பங்குகொள்ள தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தைவான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்திச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டை சேர்ந்த யோங்ச்சென் என்ற ஆராய்ச்சியாளரும், ருச்சென் என்ற ஆசிரியரும் வந்துள்ளனர். இருவரும் காதலித்து வந்த நிலையில் தைவான் நாட்டில் ஏற்கெனவே திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து இந்தியாவில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள இருவரும் விரும்பியுள்ளனர்.

இதையடுத்து தமிழ்நாடு வந்த இருவரும், இன்று தமிழ் முறைப்படி ஒளிலாயம் சித்தர் பீடத்தில் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பாத பூஜை செய்து திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண விழாவில் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


Share it if you like it