‘தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டியதற்கான ஆதாரம் இல்லை’!

‘தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டியதற்கான ஆதாரம் இல்லை’!

Share it if you like it

தாஜ்மஹாலை ஷாஜகான்தான் கட்டினார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் கிடையாது. ஆகவே, உண்மைத் தன்மையை கண்டறிய குழுவை அமைக்க வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்திருக்கிறது தாஜ்மஹால். உலக அதிசங்களில் ஒன்றாக விளங்கும் தாஜ்மஹால் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன. தாஜ்மஹால் ஒரு ஹிந்து கோயில் என்றும், அதை இஸ்லாமிய மன்னர் ஷாஜகான் அபகரித்துக் கொண்டு, தனது மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டியது என்றும் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. ஆகவே, தாஜ்மஹால் குறித்த உண்மைத் தகவலை அறிந்துகொள்ள சிலர் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருக்கின்றனர். அந்த வகையில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ரஜினிஸ் சிங் என்பவர், அலகபாத் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘தாஜ்மஹாலின் குறித்த உண்மைத் தன்மை யாருக்கும் தெரியவில்லை. ஆகவே, தாஜ்மகஹாலுக்குள் இருக்கும் 22 ரகசிய அறைகளை திறந்து ஆய்வு நடத்த வேண்டும்’ என்று கோரியிருந்தார். ஆனால், இந்த மனுவை அலகாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

இந்த நிலையில், அலகாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ரஜினிஸ் சிங். மனுவில், “தாஜ்மஹாலை மும்தாஜ் நினைவாக ஷாஜகான்தான் கட்டினார் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்விகள் கேட்டால், இந்திய தொல்லியல் துறை சரியான பதில்களை வழங்கவில்லை எனவே, இது குறித்து உண்மைத் தன்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து, விரிவான ஆய்வு நடத்த வேண்டும்” என்று கோரியிருக்கிறார். ஆனால், உயர் நீதிமன்றத்தில் கோரியதுபோல தாஜ்மஹாலுக்குள் இருக்கும் 22 ரகசிய அறைகளை திறந்து ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it