வைரலாகும் நயன் – விக்கி திருமண அழைப்பிதழ்!

வைரலாகும் நயன் – விக்கி திருமண அழைப்பிதழ்!

Share it if you like it

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமண அழைப்பிதழ்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மலையாள திரையுலகில் 2003-ம் ஆண்டு மனசினகாரே என்கிற படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005-ம் ஆண்டு நடிகர் சரத்குமாரின் ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டில் சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார். பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளாகப் பார்த்து நயன்தாரா நடித்து வருகிறார். இதன் காரணமாக, 2010-ம் ஆண்டு முதல் தற்போதுவரை தமிழ்த் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

2006-ம் ஆண்டு சிம்புவுடன் வல்லவன் படத்தில் ஜோடி சேர்ந்தார் நயன்தாரா. இதன் பிறகு, சிம்புவும் நயன்தாராவும் காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகக் கூறப்பட்டது. பின்னர், நயன்தாரா பற்றி அரசல்புரசலாக தகவல்கள் றெக்கை கட்டின. ஆனாலும், எதுவும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், 2015-ம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் என்கிற திரைப்படம் வெளியானது. படப்பிடிப்பின்போதே இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக அரசல்புரசலாக தகவல் வெளியானது. பின்னர், இருவரும் காதலிப்பது உறுதியானது.

இதன் பிறகு, கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக காதலித்து வரும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியானது. அதன்படி, சமீபத்தில் திருப்பதி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த இருவரும் ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தனர். திருப்பதி கோயிலில்தான் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருமணை அழைப்பிதழ் ரெடியாகி விட்ட நிலையில், இத்திருமண அழைப்பிதழ்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமண அழைப்பிதழ்!!

Share it if you like it