ஊடக தர்மத்தை மறந்த மீடியாக்கள்: கொதிக்கும் தமிழக மக்கள்!

ஊடக தர்மத்தை மறந்த மீடியாக்கள்: கொதிக்கும் தமிழக மக்கள்!

Share it if you like it

உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்ட, மத்திய அரசுக்கு நற்பெயர் கிடைத்து விடக் கூடாது என்பதற்காக, வழக்கம் போல தங்களது ஊடக தர்மத்தை மறந்துள்ளது தமிழக மீடியாக்கள் என்பதற்கு இக்காணொளியே சாட்சி.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்தியர்களை, மத்திய அரசு கடும் போராட்டத்திற்கு பிறகு மீட்டு வருகிறது. வல்லரசு நாடுகளே தங்கள் நாட்டு மாணவர்களை மீட்க இன்று வரை திணறி வருகிறது. ஆனால், உலக நாடுகளே இந்தியாவின் மீட்பு பணியை பார்த்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்து உள்ளது. உக்ரைனை எல்லைகளாக கொண்டுள்ள ஹங்கேரி, ருமேனியா ஆகிய நாடுகளில் வழியாக இந்தியர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு விமானங்கள், போர் விமானங்கள், தனியார் விமானங்கள் மற்றும் நான்கு மத்திய அமைச்சர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். இப்படியாக, இரவு, பகல் என்று பாராமல் மத்திய அரசு மற்றும் உயர் அதிகாரிகள் அரும்பாடுபட்டு வருகின்றனர். ”ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் மூலம் இந்தியர்கள் விரைவாக நாடு திரும்பும் சூழல் உருவாகியுள்ளது. போரை நிறுத்த இந்தியாவில் மட்டுமே முடியும். எங்களுக்கு உதவுங்கள் என்று உக்ரைன் நாடு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.

தமிழகம் தவிர அனைத்து மாநில முதல்வர்களும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். இப்படியாக, மோடி அரசுக்கு கிடைத்து வரும் நற்பெயரை, தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் விதமாக தமிழக அரசு தீவிரமாக முயன்று வருகிறது. அந்த வகையில், சென்னை திரும்பிய தமிழக மாணவர்களை பா.ஜ.க-வினர் வரவேற்றனர். அதன் பின்பு பத்திரிக்கையாளர்களை சந்திக்க முயன்ற பொழுது, பத்திரிக்கையாளர்கள் தங்களது ஊடக தர்மத்தை மறந்து பா.ஜ.க-வினரை பேட்டியெடுக்காமல் புறக்கணித்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it