தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் சனாதன ஒழிப்பு மாநாடு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் சனாதன ஒழிப்பு மாநாடு

Share it if you like it

ஐயா வைகுண்டர் – நாராயண குரு – ஐயன் காளி என்ற சனாதன சீர்திருத்தவாதிகளை முன்னிறுத்தி அவர்களை சனாதனத்தின் விரோதிகளாக சித்தரித்து அதன் காரணமாகவே சனாதனம் அழிக்கப்பட வேண்டும் என்று அதன் எதிர்ப்பு மாநாட்டை நடத்தும் தங்களின் நியாயத்தை வெளிப்படுத்தும் வகையில் மாநாட்டை முன்னெடுக்கிறார்கள். அதாவது இந்து சனாதான வழியில் வாழ்ந்தவர்களின் முன்னிறுத்தியே சனாதனத்தை ஒழிப்போம் என்று அவர்களின் விரலை வைத்து அவர்களை கண்களை குத்தும் பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியை அவர்களின் ஆசியோடு பிறந்து வளர்ந்த இந்து இந்திய விரோத சக்திகள் ஒன்றிணைந்து மீண்டும் ஒரு முறை அரங்கேற்றுகிறார்கள். இதை தங்களை மதச்சார்பற்றவர்கள் நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று சொல்லும் ஒரு கட்சியும் அதன் ஆட்சியாளர்களும் அனுமதித்து மௌனமாக வேடிக்கை பார்க்கிறார்கள்.

உண்மையான சமநீதி – சமூக நீதிப் பேசும் திராவிட ஆட்சியாளர்கள் நாங்கள். மதசார்பற்ற நாடு மதசார்பற்ற அரசு என்ற வழியில் ஈடில்லா ஆட்சியை நடத்தும் இணையில்லா ஆட்சியாளர்கள் நாங்கள் என்று ஊருக்கு ஊர் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்த திராவிட மாடல் திமுக ஆட்சியில் அவர்களின் சித்தாந்தம் சார்ந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் என்ற அமைப்பினர் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் வெளிப்படையான பொது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் சனாதனத்தின் வழியில் வாழ்ந்து அதன் குறைகளை அகற்ற சீர்திருத்தம் வேண்டும் என்று கேட்ட சனாதனிகளை முன்னிறுத்தி அவர்களையும் சனாதன எதிர்ப்பாளர்கள் போல கட்டமைத்திருக்கிறார்கள்.

சனாதன ஒழிப்பு மாநாடு என்ற இவர்களின் இந்து விரோதத்தில் இவர்கள் முன்னிறுத்தும் சீர்திருத்த நாயகர்கள் என்று குறிப்பிடும் வரிசையில் இருக்கும் ஐயா வைகுண்டர் தன் வாழ்நாள் முழுவதும் சனாதன தர்மத்தின் வழியிலேயே வாழ்ந்தவர் .அந்த தர்மத்தின் வழியிலேயே மக்களை வழி நடத்தியவர். அந்த சனாதன நாராயணனின் வாசஸ்தலமான வைகுண்டம் என்பதையே தனது பெயராக வைத்திருந்தவர். தன் வாழ்நாள் முழுவதும் தாய் தந்தை சூட்டிய அந்த சனாதன பெயரோடு வாழ்ந்து மறைந்தவர் . அதே சமயத்தில் தனிமனித தவறுகளால் ஏற்படும் சில கசப்புணர்வுகளை அகற்ற சீர்திருத்தங்கள் வேண்டும் என்று அரும்பாடு பட்டவர்.

நாராயண குரு என்ற இரண்டாமவர் நாராயணன் என்ற இறைவனின் நாமத்தையும் பயிற்றுவிப்பவன் இறைவனுக்கு நிகரானவன் என்ற குரு அடையாளத்தையும் சேர்த்து நாராயண குரு என்னும் நாமத்தோடு வாழ்ந்தவர். மக்களின் சுயநலத்தாலும் அறியாமையாலும் சமூகத்தில் நிலவும் அவலங்களை அகற்ற வேண்டும். யாவருக்கும் யாவும் கிடைக்கும் சமூக நீதியை நிலை நிறுத்த வேண்டும் என்று மக்களிடையே தர்ம சிந்தனைகளை வளர்க்க ஆட்சியாளர்கள் அதை கடுமையான சட்ட திட்டங்கள் மூலம் பாதுகாக்க வேண்டும் என்ற சீர்திருத்தங்களை தன் வாழ்நாள் முழுவதும் முன்னெடுத்தவர்.

ஐயன் காளி என்று சொல்லும் மூன்றாமவர் சனாதன தர்மம் முன்னிலைப்படுத்தி உயர்த்திப் பிடிக்கும் உன்னதமான பெண்ணியத்தின் மகா சக்தி வடிவமான காளியை தன் பெயராகக் கொண்டவர். தன் வாழ்நாள் முழுவதிலும் ஐயன் காளி என்ற பெயரோடு சமூகத்தில் ஆன்மீக சிந்தனைகளையும் தர்மநறியில் வாழும் வழிமுறைகளையும் மக்களுக்கு போதித்தவர். ஆட்சியாளர்களின் தர்ம சிந்தனையும் தனிமனித மக்களின் அற வாழ்வும் தான் சமூக நல்லிணக்கத்தையும் உண்மையான சமூக நீதியையும் பாதுகாக்க முடியும் என்பதை மக்களுக்கு ஆட்சியாளர்களுக்கும் உணர்த்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள வாழ்நாளையே அர்ப்பணித்தவர்.

சனாதன சீர்திருத்தவாதிகள் என்ற பெயரில் இவர்கள் குறிப்பிடும் யாரும் தாய் மதத்தை துறக்கவும் அந்நிய மதத்தை ஏற்கவோ அறைகூவல் விடுக்கவில்லை. அடங்கமறுங்கள் அத்துமீறுங்கள் என்று மக்களை தவறாக வழி நடத்தியவர்கள் இல்லை. இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் ஒவ்வாத அந்நிய மோகத்தையும் கலாச்சார சீரழிவுகளையும் அவர்களும் பின்பற்றி வாழ்ந்ததில்லை. அடுத்தவரையும் பின்பற்றி வாழும் படி வற்புறுத்தியதில்லை. உயிர்கள் யாவும் இன்புற்று வாழ எல்லோருக்கும் எல்லோருக்கும் கிடைத்திட வேண்டும் என்ற உயர்ந்த இலக்கில் மாற்றம் என்பது தமிழ் இருந்து துவங்க வேண்டும் என்ற தனிமனித ஒழுக்கத்தின் உச்சமாக தாங்கள் விரும்பும் வேண்டும் அத்தனை சீர்திருத்தங்களின் அடையாளமாக தாங்களே வாழ்ந்து காட்டிய உத்தமமான சனாதன தர்மிகள் அவர்கள்.

தங்களின் தர்மத்திலும் சனாதான வாழ்விலும் அவர்கள் குறைகள் கண்டதில்லை. குற்றங்களும் சுமத்தியது இல்லை. ஆனால் அதை பின்பற்றி வாழும் மக்களின் அறியாமையும் – சுயநலமும் – பேராசையும் பல நேரங்களில் ஏற்படுத்தும் வன்மமும் – துவேஷமும் சமூகத்தில் அவலங்களை ஏற்படுத்தியதை பாரபட்சமின்றி சுட்டிக் காட்டியவர்கள். இவற்றையெல்லாம் களைவதற்கு தேவையான சீர்திருத்தங்களை சட்டத்தின் மூலமாகவும் தர்ம சிந்தனைகள் மூலமாகவும் முன்னெடுப்பதற்கு தாமே வழிகாட்டியாக இருந்து ஆட்சியாளர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்களை ஆலோசனைகளை கொடுத்தவர்கள். தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்க துணை நின்றவர்கள்.

அந்த வகையில் இந்த மண்ணின் உயர்ந்த தர்மத்தின் படி தாங்கள் வாழ்ந்து அந்த தர்மத்தின் உன்னதத்தை மக்களுக்கு போதித்து அதன் அடிப்படையில் தாங்களும் வாழ்ந்து மற்றாரையும் வாழ்விக்கும் உன்னதமான வாழ்வியலை தான் அவர்கள் வாழ்நாள் முழுவதும் முன்னெடுத்தார்கள். அப்படிப்பட்டவர்களை முன்னிறுத்தி அவர்கள் சொன்ன சீர்திருத்தங்களை எல்லாம் ஏதோ சனாதனத்தின் குறைகள் போல தவறாக கட்டமைத்து அதன் அடிப்படையில் அவர்கள் எல்லாம் தங்களின் சொந்த தர்மத்தை எதிர்த்து புரட்சி செய்தது போல ஒரு பொய் பிம்பத்தை கருத்துகளை சமகாலத்தில் கட்டமைக்கும் இந்த இந்து மத துவேஷத்தை ஆட்சியாளர்கள் அனுமதித்து அமைதியாக வேடிக்கை பார்ப்பார்களே ஆனால் அவர்களும் இந்த சனாதன துவேஷத்தில் கூட்டாளிகள் என்றே அர்த்தம்.

திரும்பிய பக்கமெல்லாம் கலாச்சார சீரழிவும் வன்முறை போதை ஆயுதம் என்று பெருகி நிற்கும் சமூக அவலங்கள். அதன் காரணமாக வளர்ந்து வரும் சமூக குற்றங்கள். இவற்றால் சீரழியும் தலைமுறை ஒரு பக்கம். சட்டம் ஒழுங்கு சமூக அமைதி குலைந்து மக்களின் நலனும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் அச்சுறுத்தல் ஒரு பக்கம். என்று அத்தனை சீரழிவுகளுக்கும் காரணமான அந்நிய மோகத்தையும் கலாச்சார சீரழிவையும் எதிர்க்காதவர்கள் . முற்போக்கு வாதம் தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் இவற்றையெல்லாம் திட்டமிட்டு திணித்த அந்நிய சித்தாந்த சிந்தனையாளர்களையும் கண்டிக்காமல் ஆதரிப்பவர்கள் . உயர்ந்த மானுட தர்மம் போற்றும் சனாதன எதிர்ப்பு மாநாடு காண்பது அப்பட்டமான மத துவேஷமே. இவற்றையெல்லாம் எதிர்த்து சனாதனம் விழிப்புணர்வு மாநாடு நடத்த வேண்டியவர்கள் உண்மையில் இங்கு பாதிக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள் தான்.

ஆனால் அவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை உயர்த்தி குரல் எழுப்பினாலும் அதை ஆதிக்க மனோபாவம் என்று சொல்லும் ஆட்சியாளர்கள். தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பதிலடி தருவதை கூட மத பயங்கரவாதம் – சமூக அமைதிக்கு அச்சுறுத்தல் என்று சொல்லி கடும் அடக்குமுறையை ஏவி விடும் ஆட்சியாளர்கள். அதே பெரும்பான்மை மக்களை அவமதிக்கும் அவர்களின் சனாதன வாழ்வியலின் மீது திட்டமிட்ட விஷமத்தை வன்மத்தை காக்கும் இந்த சனாதன ஒழிப்பு மாநாட்டையும் அதை முன்னெடுக்கும் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தையும் கண்டிக்காமல் மௌனம் காப்பது ஆட்சியாளர்களின் வெளிப்படையான இந்து விரோதத்தையும் பாரபட்ச தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பது தங்களின் சார்பான கட்சிகள் தான். அதனால் தங்களின் கேட்பார் இல்லை என்று ஒரு சாரார் நினைப்பது தான் வெளிப்படையான இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு தரும் செய்தி. ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் தங்களின் சார்பானவர்கள் செய்யும் எந்த ஒரு அக்கிரமத்தையும் யாரும் தடுத்து நிறுத்தவோ தட்டிக் கேட்கவும் முடியாது என்ற இறுமாப்பில் ஆட்சியாளர்களும் இந்த அக்கிரமங்களையும் அராஜகங்களையும் அனுமதி கொடுத்து வேடிக்கை பார்ப்பது அவர்களின் அழிவுக்கே வழிகோலும். ஆட்சியாளர்கள் பாரபட்சம் பார்க்கலாம் ஆனால் அதற்கும் மேல் இருப்பவர்கள் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்திற்கும் மேல் இவர்களுக்கு வாக்களித்த மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வு ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் ஆசியோடு சனாதன ஒழிப்பை முன்னெடுக்கும் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்திற்கும் இருக்குமானால் அது அவர்களுக்கும் அவர்களின் சார்ந்த ஆட்சியாளர்களுக்கும் நலம் பயக்கும்.

தமிழகத்தில் ஒரு மாபெரும் தேசிய எழுச்சியும் ஆன்மீக எழுச்சியும் வரும் வேளையில் கருப்பு பின் புலம் கொண்ட அந்நிய சித்தாந்த அடிவருடும் கூட்டம் இந்த சனாதன எதிர்ப்பு மாநாடு அறிவிப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அதை ஆட்சியாளர்கள் அனுமதித்து வேடிக்கை பார்ப்பது இங்கு சட்டத்தின் ஆட்சி இல்லை என்பதன் அடையாளமே. தமிழகத்தில் சனாதன தர்மத்திற்கும் அதன் வழியில் வாழும் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற அச்சுறுத்தல் நிலையை இந்த மாநாடு அழைப்பு உறுதி செய்கிறது. இந்நிலையை மாநில ஆளுநரும் – மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பது ஏற்புடையது அல்ல.


Share it if you like it

One thought on “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் சனாதன ஒழிப்பு மாநாடு

Comments are closed.