நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையிலும், எதிரிகளை பந்தாடிய ‘பரம்வீர் சக்ரா’ பரமேஸ்வரன்!

நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையிலும், எதிரிகளை பந்தாடிய ‘பரம்வீர் சக்ரா’ பரமேஸ்வரன்!

Share it if you like it

இந்தியாவில் இராணுவ வீரர்களுக்கு வழங்கப்புடம் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது பெற்ற ஒரே தென் இந்தியர் பரமேஸ்வரன் இராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் பரமேஸ்வரன். எனினும், பிறந்து வளர்ந்தது எல்லாமே மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில்தான். காரணம், இவரது தந்தை இராமசாமி மும்பையில் செட்டிலானதுதான். 1946 செப்டம்பர் மாதம் பிறந்த பரமேஸ்வரன், 1972-ல் இந்திய அரசு நடத்தும் இராணுவ அதிகாரிகளுக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சியடைந்து மஹர் ரெஜிமென்ட்டின் 15-வது பட்டாலியனில் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். பின்னர், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் நடந்துவந்த போரின்போது, இந்திய அமைதிப்படையில் இணைந்தார். அப்போது, பவான் நடவடிக்கையின்போது, விடுதலைப் புலிகளின் ஆம்புஸ் தாக்குதலில், துப்பாக்கி குண்டு நெஞ்சை துழைத்தபோதும், துணிச்சலாகப் போராடி அப்படையை வீழ்த்தினார். எனினும், இத்தாக்குதலில் பரமேஸ்வரன் வீரமரணம் அடைந்தார்.

இதையடுத்து, 1988-ம் நடந்து குடியரசு தின விழாவின்போது பரமேஸ்வரனுக்கு இராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருதை இந்திய அரசாங்கம் வழங்கி கௌரவித்திருக்கிறது. இவ்விருதை அவரது மனைவி பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், பாரத பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, அந்தமானில் உள்ள ஒரு பெயரிடப்படாத தீவுக்கு பரமேஸ்வரன் இராமசாமி தீவு என்று பெயர் சூட்டி இருக்கிறார். அதேபோல, பரமேஸ்வரன் இறந்து சுமார் 30 ஆண்டுகள் கழிந்த நிலையில், சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியின் அணிவகுப்பு பயிற்சி சதுக்கத்துக்கும், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராணுவ வீட்டுவசதி வாரியத்துக்கும் மேஜர் இராமசாமி பரமேஸ்வரன் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், பரமேஸ்வரனின் சகோதரர் ராமநாதன் சென்னையில் வசிக்கும் தகவல் அறிந்து அவரிடம் சிறப்பு பேட்டி எடுத்தோம். அதன் சுருக்கம் இதோ… “பரமேஸ்வரன் சிறுவயதிலேயே துறுதுறு என்று இருப்பார். குத்துச்சண்டை போன்றவற்றில் மிகவும் ஆர்வமாக இருப்பார். 1972-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் 15-வது படையணியான மஹர் படைப்பிரிவில் செகண்ட் லெஃப்டினன்ட் ஆக குறுகிய கால ராணுவ கமிஷன் பணியில் சேர்ந்தார். ஆனால், 1974-ம் ஆண்டே லெஃப்டினன்டாக பதவி உயர்வு பெற்றார். இதன் பிறகு, அவருக்கு முழு பதவிக்கால ராணுவ பணி வழங்கப்பட்டது. 1979-ம் ஆண்டு ராணுவ கேப்டனாக ஆனவர், 1984-ம் ஆண்டு ராணுவ மேஜராக பதவி உயர்வு பெற்றார்.

இந்த சமயத்தில் இலங்கையில் அந்நாட்டு ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது, பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி, இந்தியாவிலிருந்து அமைதிப்படையை அனுப்பி வைத்தார். இந்த அமைதிப்படையில் தானும் தேர்வானால் நன்றாக இருக்கும் என்று பரமேஸ்வரன் விரும்பினார். அதேபோலவே, அவர் தேர்வானார். அப்போது, எனது வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டுச் சென்றார். அதுதான் நாங்கள் அவரை உயிருடன் பார்த்த கடைசிமுறை. 1987-ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகள் தாக்குதலில் இறந்து விட்டார். அப்போது, பரமேஸ்வரனுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள்தான் ஆகி இருந்தது. குழந்தைகள் இல்லை. பரம்வீர் சக்ரா விருதைக்கூட அவரது மனைவிதான் வாங்கினார்” என்றார் சோகத்துடன்.

https://www.facebook.com/watch/?v=876858076870404


Share it if you like it