கலைஞர் உரிமைத் தொகைன்னு பேர் வச்சிட்டு, உங்க வீட்டு பணத்தையா குடுக்கிறீங்க ? – சாட்டையடி பதிலடி !

கலைஞர் உரிமைத் தொகைன்னு பேர் வச்சிட்டு, உங்க வீட்டு பணத்தையா குடுக்கிறீங்க ? – சாட்டையடி பதிலடி !

Share it if you like it

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் பாதிப்பினால் நிவாரண நிதியாக 5060 கோடி வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். மோடி தலைமையிலான மத்திய அரசும் 1000 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வழங்கியது. இதுதொடர்பாக திமுக அமைச்சர் உதயநிதி அவர்களிடம் பத்திரிகை நிருபர் ஒருவர், “நிவாரண நிதியாக மத்திய அமைச்சரிடம் கேட்கும்பொழுது, இது என்ன ஏடிஎமா, நீங்கள் பணத்தை கேட்ட உடனே எடுத்து தருவதற்கு” என கூறியுள்ளதாகவும்,இதற்கு அவருடைய கருத்தை கேட்டு உள்ளார். அதற்கு நிருபரிடம் உதயநிதி, நாங்க என்ன அவங்க அப்பா வீட்டு காசையா கேட்டோம், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் தானே” என்று நாவடக்கம் இல்லாமல் ஒரு அமைச்சராக இருந்துகொண்டு பேசியுள்ள காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

திமுக அமைச்சர் உதயநிதி பேசிய கருத்துக்களை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களிடம் பத்திரிகை நிருபர்கள் கேட்க, அவர்கள் தாத்தா பதவியை, அவர்கள் அப்பா பதவியை அனுபவித்து கொண்டிருக்கும் உதயநிதி அப்படித்தான் பேசுவார். சாதாரண திமுக தொண்டர்கள் இத கேட்குலாம்ல, இது என்ன உங்க அப்பன் வீட்டு கட்சியா, அந்த பதவி உங்களுக்கு மட்டும்தானான்னு கேட்கலாமா ? அதேமாதிரி கலைஞர் உரிமைத்தொகைன்னு பேர் வைக்கிறிங்க, அப்போ உங்க வீட்ல இருந்தா பணத்தை எடுத்து குடுக்கிறீங்க, மக்களோட வரிப்பணம் தான” என்று அதிரடியாக உதயநிதிக்கு பதிலடி தரும் விதமாக பேசிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it