ஊடுருவலை தடுக்க சி.ஏ.ஏ. அவசியம்: ஹிந்து முன்னணி வலியுறுத்தல்!

ஊடுருவலை தடுக்க சி.ஏ.ஏ. அவசியம்: ஹிந்து முன்னணி வலியுறுத்தல்!

Share it if you like it

ஊடுருவலைத் தடுக்க சி.ஏ.ஏ. அவசியம் என்று ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் வலியுறுத்தி இருக்கிறார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு அன்வர் உசேன் என்கிற இளைஞர், போலி பாஸ்போர்ட் மூலம் ஷார்ஜாவிலிருந்து கோவை விமான நிலைத்திற்கு வந்தார். அவரிடம், குடியேற்றத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், அவர் ஏற்கெனவே திருப்பூரிலுள்ள ஒரு கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்ததும், பிறகு பெங்களூரு சென்று, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்று சொல்லி ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் பெற்று ஷார்ஜாவுக்கு சென்றதும் தெரியவந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் இதுபோன்ற ஊடுருவல்களை தடுக்க சி.ஏ.ஏ. அவசியம் என்று ஹிந்து முன்னணி வலியுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியாவுக்குள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களின் ஊடுருவல் அதிகளவில் இருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஏராளமானோர் ஊடுருவி ஆங்காங்கே வசித்து வருகிறார்கள். இதுகுறித்து ஹிந்து முன்னணி பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி வருகிறோம். ஆனால், இது குறித்து எவ்வித நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை. மேலும், இது பொய்யான குற்றச்சாட்டு என்று கூறிவருகிறது.

இந்த சூழலில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, வங்கதேச நாட்டைச் சேர்ந்த அன்வர் உசேன் என்பவர், ஷார்ஜாவிலிருந்து கோவைக்கு வந்தபோது, குடியேற்றத்துறை அதிகாரிகளிடம் சிக்கினார். இவர், ஏற்கெனவே திருப்பூர் பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்தது தெரியவந்தது. இதன் மூலம் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் ஊடுருவி இருக்கிறார்கள் என்கிற ஹிந்து முன்னணியின் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே, இனியும் தாமதிக்காமல் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தங்கி இருக்கும் வங்கதேசத்தினரை கண்டறிந்து நாடு கடத்த வேண்டும். மேலும், மத்திய அரசு உடனடியாக சி.ஏ.ஏ. சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it