தொடர் மின் தடை: ‘தல’ தோனி குடும்பம் அவதி!

தொடர் மின் தடை: ‘தல’ தோனி குடும்பம் அவதி!

Share it if you like it

‘மின் தட்டுப்பாடு ஏற்பட என்ன காரணம்? என்று அறிய விரும்புகிறேன்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி சிங் சமூக வலைத்தளத்தில் மாநில அரசுக்கு கேள்வி எழுப்பி இருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், நகர்ப்புறங்களில் குறிப்பிட்ட நேரமும், கிராமப் புறங்களில் 10 நேரத்திற்கும் மேலாகவும் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று நொண்டிச் சாக்கு சொல்லி தப்பித்து வருகிறது தி.மு.க. அரசு. அதாவது, மத்திய தொகுப்பிலிருந்து வரவேண்டிய மின்சாரம் வரவில்லை எனவும், நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதும்தான் காரணம் என்று சப்பைக்கட்டு கட்டி வருகிறது. ஆனால், நிலக்கரி போதுமான அளவு கையிருப்பு இருப்பதாகக் கூறி, தி.மு.க. அரசின் முகத்திரையை கிழித்து விட்டது மத்திய அரசு. ஆகவே, தி.மு.க. ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் மின் தட்டுப்பாடு நிலவுகிறது. முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கும் தலைநகர் ராஞ்சி மட்டுமின்றி மாநிலம் முழுவதும் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக, அங்கும் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இதனால், அம்மாநில அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் ராஞ்சியில்தான் வசித்து வருகிறார். இந்த சூழலில்தான், தோனியின் மனைவி சாக்ஷி சிங் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அப்பதிவில், ‘நாங்கள் ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் தவறாமல் செலுத்தி வருகிறோம். ஆனாலும், மாநிலத்தில் பல ஆண்டுகளாகவே மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு என்ன காரணம் என்பதை ஒரு வரி செலுத்துபவர் என்ற முறையில் அறிய விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவைப் பொறுத்தவரை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மின் நுகர்வுக்கு ஏற்ப மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதாவது, மின் நுகர்வு குறையும்போது உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மீதி இருப்பது சேமிக்கப்படுகிறது. அதேபோல, மின் நுகர்வு அதிகரிக்கும்போது, மின்சார உற்பத்தியும் அதிகரிக்கப்படுவதோடு, சேமிப்பிலிருக்கும் மின்சாரத்தையும் பயன்படுத்துகிறார்கள். இதனால், அங்கெல்லாம் மின்தட்டுப்பாடு ஏற்படுவதில்லை, மத்திய அரசையும் குற்றம் சொல்வதில்லை. ஆனால், தி.மு.க., காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள், மின்சார உற்பத்தியை அதிகரிக்காமல் இருந்துவிட்டு, மத்திய அரசை குறைகூறுவதை வாடிக்கையாக வைத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.


Share it if you like it