ஹிந்து மத சடங்கு குறித்து அவதூறு: லியோனி மீது பாயுமா சட்டம்!

ஹிந்து மத சடங்கு குறித்து அவதூறு: லியோனி மீது பாயுமா சட்டம்!

Share it if you like it

ஹி்ந்து மத சடங்குகள் குறித்து அவதூறாகப் பேசிய பட்டிமன்ற நடுவரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான லியோனி மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஹிந்துக் கடவுள்களையும், ஹிந்து மத சடங்குகளையும், ஹிந்துக்களையும் அவதூறாகப் பேசுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக, திராவிடர் கழகத்தினரும், தி.மு.க.வினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் ஹிந்து துவேசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கருப்பர் கூட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரன், கந்தசஷ்டி கவசம் குறித்தும், மைனர் விஜய் என்பவர் தில்லை நடராஜர் குறித்தும் அவதூறு செய்து வீடியோ வெளியிட்டது ஹிந்துக்களின் மனதை பெரிதும் புண்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதேபோல, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இஸ்லாமிய திருமணம் ஒன்றில் கலந்து கொண்டபோது, ஹிந்து திருமணச் சடங்கு குறித்து மிகவும் அவதூறாகப் பேசினார்.

இந்த நிலையில்தான், பட்டிமன்ற நடுவரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான லியோனி, ஹிந்து மத சடங்கு குறித்து அவதூறாகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்தநாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட ஐ.லியோனி, 60 மணி விழாவின்போது நடக்கும் ஹிந்து மத சடங்கு குறித்து அவதூறாகப் பேசினார். இது ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து அமைப்புகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து, சென்னை பாரிமுனையில் இயங்கி வரும் பாரத் ஹிந்து முன்னணி என்கிற அமைப்பின் மாநிலச் செயலர் டில்லி பாபு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். அப்புகாரில், ஹிந்துக்களின் யாகம் மிகவும் புனிதமானது. தவிர, அவை சக்தி வாய்ந்ததாக ஹிந்துக்கள் கருதுகின்றனர். மேலும், கல்லையும் கடவுளாக வணங்கும் ஒரே மதம் ஹிந்து மதம். எனவே, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில், ஹிந்து மத சடங்குகளை மிகவும் கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய லியோனி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, லியோனி தற்போது பதவி வகித்து வரும் பாடநுால் கழகத் தலைவர் பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.


Share it if you like it