தமிழக மாணவர்களின் கற்றல் அடைவுத்திறன் குறைவு; கல்வியை அழித்த பட்டம் தி.மு.க.வுக்கே: அண்ணாமலை!

தமிழக மாணவர்களின் கற்றல் அடைவுத்திறன் குறைவு; கல்வியை அழித்த பட்டம் தி.மு.க.வுக்கே: அண்ணாமலை!

Share it if you like it

தமிழக மாணவர்களின் கற்றல் அடைவுத்திறன் தேசிய சராசரியைக் காட்டிலும் குறைவாக இருப்பது மத்திய அரசின் தேசிய மதிப்பீட்டு ஆய்வின் மூலம் தெரியவந்திருக்கிறது. ஆகவே, கல்வியை அழித்ததற்கான பட்டத்தை தி.மு.க.வுக்குத்தான் தர வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடி இருக்கிறார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றுவதே கிடையாது. மாநிலத்துக்கென தனியாக கல்விக் கொள்கை அமைத்து மாணவர்களின் எதிர்காலத்தை வீணாக்கி வருகிறது. உதாரணமாக, தி.மு.க. ஆட்சியில்தான் 2011-ம் ஆண்டு சமச்சீர் கல்வி முறை சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால், அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சி சமச்சீர் கல்வி முறையில் பாடத்திட்டங்கள் தரமற்றவையாக இருப்பதாகக் கூறி, அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுத்துவிட்டது. ஆனால், தி.மு.க. தரப்பில் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டு, நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. அரசு நிராகரித்தபடியே சமச்சீர் கல்வி முறை தரமற்றதாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாகவே, தமிழக மாணவர்களால் போட்டித் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் போய்விடுகிறது. இதனால், மத்திய அரசு வேலைகளில் தமிழர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

இந்த நிலையில்தான், கற்றல் அடைவு திறன் குறித்து மத்திய கல்வி அமைச்சகம் தேசிய அளவில் கடந்த நவம்பர் மாதம் ஆன்லைன் வாயிலாக ஆய்வு நடத்தியது. இதில்தான், தமிழக மாணவர்களின் கற்றல் அடைவுத்திறன் குறைவாக இருப்பது தெரியவந்திருக்கிறது. அதாவது, 3-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் இந்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன. தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இந்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வகையில், தமிழகத்தில் 4,145 பள்ளிகளில் 19,100 ஆசிரியர்களிடம் 1,26,253 மாணவர்களிடம் மொழிப்பாடம், கணிதம், சமூக அறிவியல், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பாடங்களில் கற்றல் அடைவு திறன் குறித்த விபரங்கள் பெறப்பட்டது. இதில், 3-வது படிக்கும் மாணவர்களில் 46 சதவீத மாணவர்கள் கணித பாடத்தில் 1,000 எண்கள் வரை எழுதவும், படிக்கவும் தெரிந்திருந்தனர். இது தேசிய சராசரியை காட்டிலும் அதிகமாகும்.

அதேபோல, 10-ம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலத்தில் புரிந்து கொள்வதும், எழுதுவதிலும், சிக்கலான வார்த்தைகளை அறிந்து வைத்திருப்பதிலும் தேசிய சராசரிக்கு இணையாக இருந்தனர். அதாவது, தேசிய சராசரியான 43 சதவீதத்தை தமிழக மாணவர்கள் எட்டியிருந்தனர். மேலும், 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் தமிழகத்தின் சராசரி தேசிய சராசரியைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. வரலாற்று நிகழ்வுகள் மற்றும் வரலாற்றின் கால நிகழ்வுகளை வேறுபடுத்துவதில் தமிழக மாணவர்கள் முன்னிலை பெற்றிருந்தனர். அதன்படி, தமிழகத்தின் சராசரி 38 சதவீதமாகவும், தேசிய சராசரி 37 சதவீதமாகவும் இருக்கிறது. அதேசமயம், 10-ம் வகுப்பில் 16% மாணவர்கள் மட்டுமே தினசரி வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளை, எண்களைக் கொண்டு தீர்ப்பதில் முன்னிலை பெற்றிருந்தனர். மேலும், 10-ம் வகுப்பு மாணவர்களில் 85% தமிழக மாணவர்கள் அறிவியல் பாடத்தில் அடிப்படை அறிவியல் அறிவில்  குறைவாக இருந்தனர். 13 சதவிகிதத்தினர் மட்டுமே அடிப்படை அறிவியல் பாட அறிவை பெற்றிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, 33 சதவீத 5-ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே மொழிப்பாடத்தில் எழுத படிக்க திறன்  பெற்றிருந்தனர். 27 சதவீத மாணவர்கள் சுற்றுப்புறச்சூழல் அறிவியல் பாடத்திலும், 21 சதவிகித மாணவர்கள் கணித பாடத்திலும் மட்டுமே திறன் பெற்றவர்களாக இருந்தனர்.

இந்த நிலையில்தான், தமிழக மாணவர்களின் கற்றல் அடைவுத்திறன் குறைவாக இருப்பதற்கு தி.மு.க.சுதான் காரணம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பள்ளி மாணவர்களின் கற்றல் அடைவுத்திறன் குறைவாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது; தொடர்ந்து கல்வியை அழித்ததற்கான பட்டத்தை திமுகவுக்குத்தான் தர வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it