தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு நிலவுவது உண்மை… சொல்வது தி.மு.க. ஆதரவாளர்!

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு நிலவுவது உண்மை… சொல்வது தி.மு.க. ஆதரவாளர்!

Share it if you like it

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு நிலவுவது உண்மைதான் என்று தி.மு.க. ஆதரவாளரான டாக்டர் ரவீந்திரன் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கடுமையான மருந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக, மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிர் காக்கும் மருந்துகளே இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்திருக்கிறது. நோயாளிகள் பலரே இக்குற்றம்சாட்டினை வைத்திருப்பதுதான் வேதனை. இதனால் பல்வேறு இடங்களில் நோயாளிகள் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடே இல்லை என்று தமிழக அரசும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில்தான், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடு நிலவுவதாகவும், எப்போது கேட்டாலும் மருந்து ஸ்டாக் இல்லை என்று டாக்டர்கள் சொல்வதாகவும் நோயாளிகள் குற்றம்சாட்டி இருக்கும் வீடியோவும், தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு நிலவுவது உண்மை என்று தி.மு.க. ஆதரவாளரும் டாக்டருமான ரவீந்திரனும் பேசிய வீடியோவும் வெளியாகி தமிழக அரசின் அவலநிலையை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மருந்து வாங்க வந்த நோயாளி ஒருவரிடம், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கேள்வி எழுப்புகிறது. அதற்கு அந்த நோயாளி, கடந்த இரு மாதங்களாக மருந்து மாத்திரைகள் வேண்டி, தொடர்ந்து மருத்துவமனைக்கு வருகிறேன்.

எப்போது வந்து கேட்டாலும், மருந்து இல்லை, வெளியில் வாங்கிக் கொள்ளுங்கள் அல்லது லோக்கல் மருத்துவமனைகளில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று டாக்டர்கள் கூறுவதாகத் தெரிவிக்கிறார். அதேபோல, இன்னொருவர் கூறுகையில், மருந்து மாத்திரை வேண்டி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும்போதெல்லாம் இன்று போய் நாளை வா என்றுதான் கூறுகிறார்களே தவிர, ஒரு நாளும் மருந்து கொடுத்ததே இல்லை என்று குற்றம்சாட்டுகிறார். மேலும், தமிழக அரசு நடமாடும் மருத்துவமனை திட்டத்தை தொடங்கி வைத்ததாகச் சொல்கிறது. ஆனால், அந்த நடமாடும் மருத்துவமனை ஒருநாள் கூட எங்க ஏரியா பக்கம் வந்ததே இல்லை. நானும் பார்த்ததே இல்லை என்று கூறுகிறார்.

இது ஒருபுறம் இருக்க, மற்றொரு பிரபல ஊடகம், தி.மு.க. ஆதரவாளரும், டாக்டருமான ரவீந்திரனிடம் நேர்காணல் நடத்தி இருக்கிறது. இதில் பேசும் ரவீந்திரன், தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு நிலவுவது உண்மைதான். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், போதுமான மருந்துகள் குடோன்களில் ஸ்டாக் இருக்கிறது. தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸ் குடோனிலும் தேவையான மருந்துகள் இருக்கிறது. வேண்டுமானால் வந்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். ஆனால், உண்மையில் போதுமான மருந்துகள் கையிருப்பு இல்லை என்பதே உண்மை. கிராமப்புற மருத்துவமனைகள் மட்டுமல்லாது, மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது என்று உண்மையை போட்டு உடைத்திருக்கிறார். இதன் மூலம், தி.மு.க. அரசின் பொய், பித்தலாட்டம் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டிருக்கிறது.


Share it if you like it