கல்வித்துறையில் ஆண்டுதோறும் 644 கோடி ரூபாயை தி.மு.க. சுருட்டி வருவதாக குற்றம்சாட்டி இருக்கும் மூத்த அரசியல்வாதியான பழ.கருப்பையா, பல திடுக்கிடும் தகவல்களையும் அம்பலப்படுத்தி இருக்கிறார்.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வெறும் 2, 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே போதும், மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கிறோம் என்று கூறியிருந்தார். இது கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் கிளப்பிய நிலையில், மறுதினமே 75 சதவிகித வருகை இருந்தால் மட்டுமே தேர்வெழுத முடியும் எந்று அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
இந்த நிலையில்தான், கல்வித்துறையின் ஊழல் முறைகேடுகள் குறித்து அம்பலப்படுத்தி இருக்கிறார் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் கட்சியின் நிறுவனத் தலைவருமான பழ.கருப்பையா. “வருடத்தில் 2, 3 நாட்கள் மட்டும் வந்தால் போதும் என்றால் பள்ளிக்கூடம், ஆசிரியர்கள் எதற்கு? மாணவர்களுக்கு, லேப்டாப், சைக்கிள், யூனிபார்ம் போன்றவை வழங்கப்படுகிறது. இதற்கான செலவு மட்டும் 644 கோடி ரூபாய் என்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் பள்ளி சேர்க்கை பட்டியலில் இருக்கிறார்களா இல்லையா? அப்படியானால், இல்லாத மாணவர்களை இருப்பதாகக் காட்டி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 644 கோடி ரூபாயை தி.மு.க. அரசு சுரண்டுகிறதா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுகுறித்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து விட்டு தி.மு.க. அரசின் பித்தலாட்டங்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.