தமிழக பக்தர்களின் ரத்தக் கண்ணீர்!

தமிழக பக்தர்களின் ரத்தக் கண்ணீர்!

Share it if you like it

தமிழக பக்தர்களின் ரத்தக் கண்ணீர்!

“ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்பது ஔவையார் வாக்கு. “ஆலயம்” என்பது இறைவனின் இருப்பிடம். நாம் நமது வீட்டில், இறைவனின் படத்தை வைத்து, தினமும் பூஜை செய்தாலும், கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி பூஜை செய்யும் போது, ஒரு வித உணர்வு மனதில் ஏற்படும். அதன் மூலம் மனது சுத்தமாகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

எல்லா அரச மரத்திலும், விநாயகர் வீற்றிருப்பார். விநாயகரை சுற்றுவதன் மூலமாக, அரச மரத்தின் மூலம் வெளியேறும் “பிராண வாயு”, நமக்கு அதிக அளவில் கிடைக்கும்.

‘ஆக்ஸிஜன்’ என்ற ‘ பிராணவாயு’ இல்லாமல், மக்கள் எந்த அளவிற்கு, கொரோனா காலத்தில் அவதிக்கு உள்ளாயினர் என்பது, நமக்கு நன்கு தெரியும். அரச மரத்தை தினமும் சுற்றுவதன் மூலமாக, நமது உடலுக்கு அதிக பிராணவாயு கிடைக்கும். அதன் மூலம், நமது உடல் நலத்தின் ஆரோக்கியம் மேம்படும். எனவே தான் அதற்கு, “அரச மரம்” என பெயரிடப் பட்டுள்ளது.  அரச மரம் தோறும் விநாயகர் இருப்பதன் மூலம், அரச மரத்தை சுற்றி, நமக்கு தேவையான பிராண வாயுவை, நாம் எடுத்துக் கொள்கிறோம்.

அது போலவே, தினமும் காலையில், துளசி தீர்த்தத்தை அருந்துவதன் மூலம், நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இவற்றை போல பல நன்மைகள், கோவிலுக்கு தினமும் செல்வதால் நமக்கு கிடைக்கும்.

கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் வழிமுறைகள்:

பொது மக்கள் அளிக்கும் நன்கொடைஇறை நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் சமய ஈடுபாடு கொண்டோர், தொழில் அதிபர்கள், செல்வந்தர்கள், தனியார் நிறுவனங்கள், பொது மக்கள் ஆகியோர் மனமுவந்து அளிக்கும் நன்கொடைகளைக் கொண்டு பெரும்பாலான திருப்பணிகள் நடைபெறுகின்றன.

திருக்கோயில் நிதிபல்வேறு திருக்கோயில்களின் திருப்பணி அவற்றின் நிதியில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன.

நிதி மாற்றம்நிதி வசதி மிக்க திருக்கோயில்களின் உபரி நிதியில் இருந்து, நிதி தேவையான திருக்கோயில்களுக்குத் திருப்பணிகளை மேற்கொள்ள இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் 36-வது பிரிவின் கீழ் நிதி மாற்றம் மூலமாக நிதியுதவி வழங்கப்படுகிறது.

பொது நல நிதிஆணையரின் பதவிப் பெயரில் `பொது நல நிதி` என்ற நிதியம் தனி நபர்கள் தானாக முன் வந்து அளிக்கும் நன்கொடை மற்றும் இந்து சமய நிறுவனங்களின் பங்களிப்பு தொகை ஆகியவற்றைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கு பொதுநல நிதி மூலம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

உபயத் திருப்பணிபக்தர்கள் தாமே முன் வந்து தனது சொந்த செலவிலும், துறை மேற்பார்வையிலும் திருக்கோயில்களுக்குத் திருப்பணி செய்வது வழக்கத்தில் உள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் அமைந்துள்ள திருக்கோயில்கள் திருப்பணிஇந்து சமய அற நிலையத்துறை ஆளுகையில் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் அமைந்துள்ள சிறு திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட, நிதி மிகுந்த திருக்கோயில்களின் உபரி நிதியில் இருந்து,  நிதி பெறப்பட்டு திருக்கோயில் ஒன்றுக்கு ரூ.1,00,000/- வீதம் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்து சமய பக்தர்களிடம் இருந்து நிதியுதவி பெற்றோ அல்லது மற்ற கோவில்களில் இருந்து நிதி உதவி பெற்றோ,  கோவில்களுக்கு புனரமைப்பு செய்யப்படுகின்றது. ஆனால் தற்சமயம் அந்தக் கோவிலும் தாக்குதலுக்கு உள்ளாக்கப் படுவது, மிகவும் வேதனையான செய்தியாக இருக்கின்றது.

முகலாயர் படையெடுப்பின் போதும், கிறிஸ்துவ படையெடுப்பின் போதும், கோவில்கள் மீது ஏற்பட்ட தாக்குதல்களை தான், நாம் பாடத்தில் படித்து இருக்கின்றோம். ஆனால் தற்போது, தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியிலும், அது போன்ற அவலங்கள் தொடர்வது, தமிழக பக்தர்களை ரத்தக் கண்ணீர் வடிக்க வைக்கின்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயம்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்நன்சூர் கிராமத்தில், கைலாசநாதர் கோவில் உள்ளது. அங்கு உள்ள சிவலிங்கத்தை மர்மநபர்கள்  சேதப்படுத்தி உள்ளனர். மேலும் அங்கு இருந்த விநாயகர் சிலைகளையும், பார்வதி சிலைகளையும், நந்தி சிலைகளையும் சேதப்படுத்தி உள்ளனர். அந்தக் கோவில், சோழ மன்னர்களால் கட்டப்பட்ட, மிகப் பழமையான கோவில்.

சேதம் அடைந்த கோவிலைக் கண்ட கிராமத்து மக்கள், மிகவும் அதிர்ச்சியுற்று, காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்குறிச்சி:

திருநெல்வேலி மாவட்டத்தில் அத்ரி மலையில், இந்து கோவில் சூறையாடப்பட்டு உள்ளது. இந்து மதம் அடையாளம் இருந்த இடத்தில், அங்கு, இஸ்லாமிய மத சின்னங்கள் பொறிக்கப்பட்டு உள்ளது. இதனை கண்ட அங்கு உள்ள பக்தர்கள், மிகுந்த வேதனைக்கு உள்ளாகி, காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

ராணிப்பேட்டையில் உள்ள துர்க்கை அம்மன் கோவில்:

ராணிப்பேட்டையில் உள்ள துர்க்கை அம்மன் மற்றும் காமாட்சி அம்மன் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு,  அம்மனின் ஆடைகள் எரிக்கப்பட்டு உள்ளன. அந்த கோவில் 1,500 வருட பழமை வாய்ந்த கோவில். தகவல் அறிந்ததும், அங்கு உள்ள இந்து பக்தர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் மதுர காளி அம்மன் கோவில்:

பெரம்பலூர் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. அங்கு உள்ள அம்மன் சிலைகள் தலை துண்டிக்கப்பட்டு, மற்ற சிலைகளின் தலைகளும் துண்டிக்கப்பட்டு, தரையில் விழுந்ததைக் கண்ட பக்தர்கள், மிகுந்த வேதனைக்கு ஆளாகினர்.

கோயம்புத்தூரில் உள்ள முத்தன்குளம் கோவில்:

நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முத்தன் குளம் கோவில், கோயம்புத்தூரில் உள்ளது. அந்தக் கோவில் இடிக்கப்பட்டது. மேலும், அதனுடன் சேர்ந்து, அதன் அருகாமையில் உள்ள மற்ற சில கோவில்களான அம்மன் கோவில், பண்ணாரி அம்மன் கோவில், கருப்பராயன் கோவில் அங்காளம்மன் கோவில்களும் சேர்ந்து இடிக்கப் பட்டது, தமிழக பக்தர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது.

திருவாடானை அருகே இடிந்து விழும் நிலையில் பக்தர்கள் தங்கும் விடுதி:

திருவாடானை அருகே சிவகங்கை தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற திருத்தலம் ‘பாகம்பிரியாள் கோவில்’. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து  தரிசனம் செய்து, இரவில் தங்குவார்கள்.

மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில், பக்தர்கள் தங்கும் விடுதி ஆபத்தான நிலையில், இடிந்து விழும் தருவாயில் உள்ளது. இதனை புனரமைப்பு செய்ய வேண்டும் என பக்தர்கள், தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அனைத்து நாட்களிலும் ஆலயம் திறக்கக் கோரி, அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி, இந்து ஆன்மீக பக்தர்கள், பல்வேறு இடங்களில் போராடினார்கள். அதன் விளைவாகவே, அனைத்து நாட்களிலும், ஆலயம் திறக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டு  உள்ளது. எதுவும் போராடினால் தான் வெற்றி கிடைக்கும் என்ற நிலைக்கு, இன்று,  இந்துக்கள் தள்ளப் பட்டது, மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்றால், அது மிகையல்ல.

  • அ.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

உதவிய தளங்கள்:

https://hrce.tn.gov.in/hrcehome/hrce_thiruppani.php

http://www.opindia.com/2021/06/tamil-nadu-temple-vandalised-shivalingam-chopped-off-into-pieces-pudukkotai-district/

https://english.newstracklive.com/news/tamil-nadu-miscreants-ejaculated-semen-at-gods-idol-in-ranipet-hindu-temple-sc103-nu764-ta764-ta321-1172732-1.html

https://www.news18.com/news/india/hindu-groups-stage-protests-after-demolition-of-9-temples-in-tamil-nadus-coimbatore-3977048.html

https://www.dinakaran.com/news_detail.asp?Nid=712750


Share it if you like it