பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு பெற்றிருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் கல்யாணசுந்தரம், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை பூர்வீகமாகக் கொண்டவர் கே.கல்யாணசுந்தரம் பிள்ளை. திருவிடைமருதூர் குப்பையா கல்யாணசுந்தரம் என்பது இவரது இயற்பெயர். தனது 6-வது வயதில் கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகும்பேஸ்வரன் கோயிலில் தனது முதல் அரங்கேற்றத்தை நடத்தினார். இவருக்கு தற்போது 91 வயதாகிறது. தமிழகத்தில் பிறந்தாலும், 7 தசாப்தங்களுக்கு முன்பு, பரதநாட்டியத்தை பிரபலப்படுத்துவதற்காக தஞ்சாவூரிலிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தார். அங்கு, இந்தியாவில் பரதநாட்டியத்திற்கான சிறந்த பயிற்சி மையமாக கருதப்படும் ஸ்ரீராஜராஜேஸ்வரி பரத நாட்டிய கலா மந்திரை நிறுவினார்.
பரதநாட்டியக் கலைஞரான இவருக்கு நிகழாண்டுக்கான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அவர் தனது குருநாதர்களுக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.
https://www.facebook.com/watch/?v=1870687669954255