தெலங்கானாவில் சிறுமி கூட்டு பலாத்காரம்: ஒவைசி கட்சி எம்.எல்.ஏ. மகனுக்கு தொடர்பு!

தெலங்கானாவில் சிறுமி கூட்டு பலாத்காரம்: ஒவைசி கட்சி எம்.எல்.ஏ. மகனுக்கு தொடர்பு!

Share it if you like it

ஹைதராபாத்தில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஒவைசி கட்சியின் எம்.எல்.ஏ. மகனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 28-ம் தேதி ஒரு பப்பில் பார்ட்டி நடந்திருக்கிறது. இந்த பார்ட்டியில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட வசதி படைத்தவர்களின் பிள்ளைகள் கலந்துகொண்டிருக்கிறார்கள். பார்ட்டி முடிந்ததும் அனைவரும் கிளம்பி இருக்கிறார்கள். அப்போது, பிளஸ் 2 படிக்கும் ஒரு மைனர் மாணவியை அணுகிய 5 மாணவர்கள், அந்த மாணவியை தங்களது காரில் கொண்டு சென்று வீட்டில் விடுவதாகக் கூறியிருக்கிறார்கள். இதை நம்பி அச்சிறுமியும் காரில் ஏறி இருக்கிறார்.

ஆனால், கார் அச்சிறுமியின் வீட்டிற்குச் செல்லாமல் நேராக ஒரு இருட்டுப் பகுதிக்குச் சென்றிருக்கிறது. கூச்சலிட்ட அச்சிறுமியின் வாயை பொத்தி அழைத்துச் சென்ற அக்கும்பல், அச்சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறது. இதில் அப்பெண்ணுக்கு கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர், அக்கும்பல் அந்தப் பெண்ணையும், காரையும் அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டது. இதன் பிறகு, சுயநினைவுக்கு வந்த அப்பெண், மெதுவாக எழுந்து வீட்டிற்கு சென்று சேர்ந்திருக்கிறார். அங்கு தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தகவலை பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, அப்பெண்ணின் தந்தை ஜூப்ளி ஹில்ஸ் போலீஸில் புகார் செய்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமி கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்தில் நின்றிருந்த மெர்சிடிஸ் காரை போலீஸார் கைப்பற்றினர். இந்த சம்பவத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவரின் மகனும், சிறுபான்மை வாரியத் தலைவர் ஒருவரின் மகனும் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 17 வயது சிறுமியை போலீஸார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிறுமி கூட்டு பலாத்கராம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, போக்ஸோ வழக்கை கூட்டு பலாத்கார வழக்காக மாற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக ஒரு நபரை பிடித்து விசாரணை செய்தனர். அந்த நபரும் மைனர் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதோடு, மேற்படி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை அச்சிறுவன் ஒப்புக் கொண்டதோடு, யார் யார் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது என்கிற தகவலையும் சொல்லி விட்டதாககவும் சொல்கிறார்கள்.

இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் தெலங்கானா மாநில பா.ஜ.க. தலைமை செய்தித் தொடர்பாளர் கிருஷ்ணா சாகர் ராவ் , “இந்த குற்றத்தைச் செய்த 5 பேரில் ஒருவர் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) எம்.எல்.ஏ.வின் மகன். மற்றொருவர் சிறுபான்மைத் தலைவர் ஒருவரின் மகன் என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தும் ஹைதராபாத் காவல்துறை இதுவரை எந்த குற்றவாளியையும் கைது செய்யவில்லை. யாருடைய உத்தரவுக்காக காத்திருக்கிறீர்கள்? ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசியா அல்லது முதல்வர் கே.சி.சந்திரசேகர ராவா? தெலுங்கானா மாநிலத்தில் பகல்நேர ஹேக்கிங், மதங்களுக்கிடையேயான கொலைகள் மற்றும் கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சட்டத்தின் மீதான பயம் மாநிலத்தில் துளியும் இல்லை” என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.


Share it if you like it