கிறிஸ்தவ கல்லறையா ஹிந்து கோயில் இடம்?!

கிறிஸ்தவ கல்லறையா ஹிந்து கோயில் இடம்?!

Share it if you like it

சங்கரன்கோவில் அருகே ஹிந்துக் கோயில் இடத்தை கல்லறையாக மாற்ற நடந்த முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பின் சங்கரன்கோவில் நகர முன்னாள் தலைவர் விக்னேஷ் கூறியதாவது:- “சங்கரன்கோவில் ரயில்வே பீடர் ரோட்டைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. இவர், நல்ல மரியன் திருச்சபை என்ற பெயரில் சட்ட விரோதமாக சர்ச் நடத்தி வருகிறார். இதன் மூலம் ஹிந்து மக்களை மோசடியாக மதமாற்றம் செய்து வருகிறார். இவர் மீது அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்வது, மதக் கலவரத்தை தூண்டுவது என தாலுகா காவல் நிலையத்தில் பல வழக்குகள் உண்டு. உதாரணமாக, கே.எஸ்.ஏ. பெட்ரோல் பங்க் எதிரே இருக்கும் கல்லறைக்கு பின்புறம் இருந்த அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து, பெந்தேகோஸ்தே சபைக்கு சொந்தமான இடம் என்று போர்டு வைத்திருந்தார். இது குறித்து வருவாய்த்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் புகார் செய்யப்பட்டவே, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதோடு, தங்கபாண்டியை எச்சரித்தும் அனுப்பினார்கள்.

இந்த நிலையில்தான், சங்கரன்கோவில் டூ திருநெல்வேலி சாலையில் இந்து கோயில் இருக்கும் இடத்தின் அருகே, மதக்கலவரத்தை தூண்டும் வகையில் சடலத்தை அடக்கம் செய்ய முயன்று சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அதாவது, சங்கரன்கோவில் டூ திருநெல்வேலி சாலையில் சுமார் 2 கி.மீ. தூரத்தில் அருள்மிகு கரும்புளி சாஸ்தா, அருள்மிகு குரும்புடையார் சாஸ்தா திருக்கோவில்கள் இருக்கின்றன. இவை இரண்டுக்கும் நடுவே கோயிலுக்குச் சொந்தமான நிலம் இருக்கிறது. இந்த இடத்தில் குழியை தோண்டி ஒரு சடலத்தை அடக்கம் செய்ய முயன்றார் பாதிரியார் தங்கபாண்டி. தகவலறிந்த நானும், பா.ஜ.க. மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராஜ் என்கிற அந்தோணிராஜ், நகர இளைஞர் அணி பொதுச் செயலாளர் சங்கர்ராஜ், நகர இளைஞர் அணிச் செயலாளர் பிரதீப், ஹிந்து முன்னணி நகரத் தலைவர் எஸ்.என்.சங்கர், பிறர்குடையார் சாஸ்தா கோயில் தர்மகர்த்தா சத்யன் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சென்றோம்.

அப்போது, பாதிரியாருடன் வந்தவர்கள் சம்பவ இடத்தில் குழி தோண்டிக் கொண்டிருந்தார்கள். அமரர் ஊர்தியில் ஒரு சடலம் இருந்தது. ஆகவே, நாங்கள் வழிபடும் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சடலத்தை அடக்கம் செய்யக் கூடாது என்று கூறினோம். ஆனால், நாங்கள் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமல், சடலத்தை தூக்கிக் கொண்டு அடக்கம் செய்ய வந்தார்கள். இதனால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, மானூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மெயின் பைப் லைனை பாதிரியார் தங்கபாண்டியும், அவருடன் வந்தவர்களும் உடைத்து சேதப்படுத்தி விட்டார்கள். இதையடுத்து, போலீஸாருக்கும், குடிநீர் வழங்கம் துறையினருக்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவல் தெரிவித்தோம். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சடலத்தை வேறு இடத்தில் அடக்கம் செய்யுமாறு கூறி, பாதிரியார் தங்கபாண்டி மற்றும் அவருடன் வந்தவர்களை அனுப்பி வைத்தனர். அதேசமயம், குடிநீர் வழங்கல் துறையினர் பாதிரியார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்கள்.

இது ஒருபுறம் இருக்க, இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், உயிரிழந்தது செங்குந்தர் சமுதாயத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர். இவர் ஒரு ஹிந்து. அப்படி இருக்க, அவரது சடலத்தை பாதிரியார் தங்கபாண்டி அடக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அது என்ன அனாதை சடலமா? ஆகவே, பிரச்னை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டே, பழனிச்சாமியின் சடலத்தை கோயில் இடத்தில் அடக்கம் செய்ய வந்திருக்கிறார் பாதிரியார் தங்கபாண்டி. ஆகவே, அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, தாசில்தாரிடமும், போலீஸிலும் புகார் செய்திருக்கிறோம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வருகிற 6-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கிறோம்” என்றார்.

சடலத்தை அடக்கம் செய்யச் செல்லும் பாதிரியார் தங்கபாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள்…

பேச்சுவார்த்தை நடத்தும் போலீஸார்…


Share it if you like it