ஏப்ரல் 14 தமிழகத்தில் திருவிழா: அண்ணாமலை சஸ்பென்ஸ்!

ஏப்ரல் 14 தமிழகத்தில் திருவிழா: அண்ணாமலை சஸ்பென்ஸ்!

Share it if you like it

தமிழகத்தில் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு மட்டுமல்ல, திருவிழாவாக கொண்டாடப் போகிறார்கள் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அதிரடியாகக் கூறியிருக்கிறார்.

தென்காசி மாவட்ட பா.ஜ.க. சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் துறைமுகம் வைத்திருக்கிறார். மற்றொருவர் துபாயில் கம்பெனி நடத்துகிறார். இன்னொருவர் ஆப்பிரிக்காவில் டிஸ்லரி கம்பெனி நடத்துகிறார். மற்றொருவர் லண்டனில் தனது மனைவி பெயரில் 3 கம்பெனிகளை நடத்தி வருகிறார். இவர்கள் எல்லாம் யார் என்பது தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14-ம் தேதி அறிவிக்கப்படும். ஆகவே, தமிழ்ப் புத்தாண்டு ஊழலுக்கு எதிரான மிகப்பெரிய திருவிழாவாக இருக்கும்.

குறிப்பாக, அன்றையதினம் ஒத்த செங்கல் திருடனுக்கு கச்சேரி இருக்கு. அதேபோல, ரெட் ஜெயன்ட் மூவிஸுக்கு எங்கிருந்து பணம் வந்தது என்பதும் அறிவிக்கப்படும். இதன் பிறகு, ஆடு மேய்ப்பவர் முதல் பஸ் கண்டக்டர் அனைவரும் தி.மு.க.வினரை பற்றி பேசுவார்கள். எங்கிருந்து பணம் வந்தது என்று கேட்பார்கள். இதற்கு அப்புறம் பா.ஜ.க.வின் அரசியல் இருக்கிறது” என்று ஆவேசமாக பேசியிருக்கிறார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அண்ணாமலை இன்னும் என்னவெல்லாம் பேசினார் என்று தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்…


Share it if you like it