தென்காசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு திரும்பிய பா.ஜ.க.வினரின் வாகனங்கள் மீது தி.மு.க.வினர் முட்டை, தக்காளி மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகளை வீசி ஆர்கசம் அடைந்தனர். இதையடுத்து, பா.ஜ.க.வினர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்ட பா.ஜ.க. சார்பில் வாய்க்காலம் பகுதியில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். இக்கூட்டத்துக்கு, பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். பா.ஜ.க. பொதுக்கூட்டத்துக்கு இவ்வளவு மக்கள் கூட்டமா என்று தி.மு.க.வினர் அரண்டு போனார்கள். இதை தி.மு.க.வினரால் ஜீரணிக்கவே முடியவில்லை. எனவே, பொதுக்கூட்டம் முடிந்து சொந்த ஊர் நோக்கி திரும்பிய பா.ஜ.க. தொண்டர்களின் வாகனங்களின் மீது முட்டை, தக்காளி மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
கடையநல்லூர் அருகேயுள்ள சொக்கம்பட்டி – திரிகூடபுரம் பகுதியில் நடந்த இச்சம்பவத்தை கண்டித்து, பா.ஜ.க.வினர் 300-க்கும் மேற்பட்டோர் திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலிறிந்து வந்த தென்காசி போலீஸார், மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து, பா.ஜ.க.வினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர். தி.மு.க.வினரின் அராஜகம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.