கன்னியாகுமரியைத் தொடர்ந்து தென்காசியிலும் ஒரு பாதிரியாரின் லீலைகள் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் பாதிரியார் ஸ்டான்லி குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள பாத்திமா நகரைச் சேர்ந்த பெனடிக்ட் ஆன்ட்ரோ, பிலாங்காலை பகுதியிலுள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். பாவமன்னிப்பு வழங்கும் பணியைச் செய்து வந்த இவர், சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் நைசாகப் பேசி செல்போன் நம்பர்களை வாங்கி இருக்கிறார். பின்னர், அப்பெண்களுக்கு மெசேஜ் அனுப்புவதை வழக்கமாக வைத்திருந்தவர், ஒரு கட்டத்தில் ஆபாச மெசேஜ்களையும் அனுப்பி இருக்கிறார். மேலும், அப்பெண்களை தனது காதல் வலையில் வீழ்த்தி, வீடியோ காலில் ஆபாசமாக வரச்சொல்லி அதை பதிவு செய்து வைத்துக் கொண்டார்.
இதன் பிறகு, அப்பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். அதேபோல, 15 வயது முதல் 20 வயதுக்குள் இருக்கும் சிறுமிகளிடம் இயேசுவை காட்டுவதாகச் சொல்லி இரவு நேரங்களில் வரச்சொல்லி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இவரால் பாதிக்கப்பட்ட சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், தனது நண்பர் ஆஸ்டினிடம் சொல்லி இருக்கிறார். அவர் தேவாலயத்துக்கு வந்து, பாதிரியாரை தாக்கி, அவரது லேப்டாப்பை பறித்துச் சென்றார். அதில், சுமார் 80-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை பாதிரியார் சேகரித்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதனிடையே, சட்டக் கல்லூரி மாணவர் ஆஸ்டின் கைது செய்யப்படவே, பாதிரியாரின் வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கின. இதையடுத்து, பாதிரியாரால் பாதிக்கப்பட்ட நர்ஸிங் மாணவி போலீஸில் புகார் செய்தார். தொடர்ந்து, பல பெண்களும் போலீஸில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து பாதிரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில்தான், பாதிரியார் பெனடிக்ட் ஆன்ட்ரோவைப் போலவே தென்காசி மாவட்டத்திலும் ஒரு பாதிரியார் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள மகிழ்வண்ணநாதபுரத்தில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் அமைந்திருக்கிறது. இங்கு பாதிரியாக பணிபுரிந்து வருபவர் ஸ்டான்லி குமார். இவர், சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும், சபை பெண்கள் பலரும் டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்திருக்கிறார்கள். இதையடுத்து, பாதிரியார் ஸ்டான்லி குமார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்கிறார்கள். பாதிரியார் ஸ்டான்லி குமாரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிரியார்கள் தொடர்ந்து பாலியல் விவகாரத்தில் சிக்கி கைதாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.