இந்துக்களுக்காக குரல்கொடுக்கும் தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி சமீபத்தில் முருகப்பெருமானை இழிவாக பேசிய கருப்பர் கூட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்து,அதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் தமிழக பா.ஜா.க வின் சார்பாக இந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வு வேல்யாத்திரை நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் டாக்டர்கள் L.முருகன் கூறுகையில்,
மாற்றுமத பண்டிகைக்கு எல்லாம் அரசு விடுமுறை அறிவிக்கும் தமிழக அரசு, தமிழக இந்துக்கள் கொண்டாடும் தைப்பூசத் திருநாளை ஏன் அரசு விடுமுறை அளிப்பதில்லை என்று கேள்வி எழுப்பினார்.
அதுமட்டுமல்லாமல் உடனடியாக இந்த ஆண்டு தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பா.ஜா.க கோரிக்கை விடுத்தது.
அதற்கு செவி சாய்த்த தமிழக அரசு இந்த ஆண்டு முதல் தைப்பூசத் திருநாளுக்கு அரசு பொது விடுமுறை என அரசாணை வெளியிட்டுள்ளது.
https://twitter.com/itisatp/status/1346390803988455427
தமிழ் கடவுள் முருகனின் தைப்பூசத் திருநாள் விடுமுறை நாம் தமிழர் கட்சி கோரிக்கை மூலமாக மட்டுமே பெறப்பட்டது
பல வருடங்களாக சீமான் வைத்த கோரிக்கை இது. இது போல சொந்தம் கொண்டாட மட்டுமே பா ஜ க வுக்கு தெரியும்.