தி.மு.க.வுக்கு தொல்லை கொடுப்பவர்கள் நீண்ட காலம் இருக்க முடியாது: ‘ரெட் லைட்’ பாரதி பகிரங்க மிரட்டல்!

தி.மு.க.வுக்கு தொல்லை கொடுப்பவர்கள் நீண்ட காலம் இருக்க முடியாது: ‘ரெட் லைட்’ பாரதி பகிரங்க மிரட்டல்!

Share it if you like it

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்குத் தொல்லை கொடுக்கலாம் என்று நினைகிறார்கள். ஆனால், தொல்லை கொடுக்கும் எவனும் நீண்டகாலம் இருக்க முடியாது என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ரெட் லைட் புகழ் ஆர்.எஸ்.பாரதி பகிரங்க மிரட்டல் விடுத்திப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. வர்த்தகப் பிரிவு மாநிலத் துணைத் தலைவரும், தெற்கு மாவட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பழஞ்சூர் செல்வம், அதிராம்பட்டினம் அருகே புதிய திருமண மண்டபம் கட்டியிருக்கிறார். இதன் திறப்பு விழாவில் அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, சாக்கோட்டை அன்பழகன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மண்டபத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்க, 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “இந்தியாவில் ஆளுநர்கள் வித்தியாசமாக நடந்துகொண்டு வருகின்றனர். தமிழக ஆளுநர் ரவி, செந்தில்பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று முதல்வருக்குக் கடிதம் எழுதிவிட்டு, துக்ளக்கை போல 5 மணி நேரத்துக்குள் திரும்பப் பெற்றுக்கொண்டார். அவர் எழுதிய கடிதத்தில், செந்தில் பாலாஜி மீது என்ஃபோர்ஸ்மென்டிலே வழக்கு இருக்கிறது. எனவே, அவர் அமைச்சரவையில் நீடிக்கக் கூடாது எனச் சொன்னார். அதேசமயம், ஊழல் வழக்குள்ள ஒருவரை மகாராஷ்டிரா ஆளுநர் துணை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். இதிலிருந்து என்ன புரிகிறதென்றால், பா.ஜ.க. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு வேஷம் போடுகிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்குத் தொல்லை கொடுக்கலாம் என்று நினைகிறார்கள். ஆனால், தி.மு.க.வுக்குத் தொல்லை கொடுத்தால் எவனும் நீண்டகாலம் வாழ முடியாது, இருக்கவும் முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாத்தான் ஆளுநரே பல்டி அடித்து வாபஸ் வாங்கிவிட்டார். குழந்தைக்கு ஒரு கையில் பாதிப்பு ஏற்பட்டது பற்றி எங்களைக் கேள்வி கேட்கும் எடப்பாடி பழனிசாமியை, இந்த நாட்டு மக்கள் கேள்வி கேட்க மாட்டார்களா? உங்களையெல்லாம் ஆளாக்கி வளர்த்த ஜெயலலிதாவை 70 நாள்கள் மருத்துவமனையில் தங்கவைத்துவிட்டு, அ.தி.மு.க.வினர் ஒன்றரை கோடி ரூபாய்க்கு இட்லி, தோசை சாப்பிட்டனர். ஜெயலலிதா உயிரையே காப்பாற்ற முடியாத எடப்பாடிக்கு எங்களைக் கேள்வி கேட்க யோக்கியதை இல்லை” என்றார்.


Share it if you like it