கடந்த வெள்ளிக்கிழமை அன்று தற்போதைய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பழமை வாய்ந்த அல் குத்தூஸ் மசூதியில் நடைபெற்ற ஒரு என்கவுண்டரில் இந்தியாவின் ஒசாமா பின்லேடன் என்று இஸ்லாமிய பயங்கரவாதிகள் மத்தியில் பட்டப் பெயரோடு வலம் வந்த அபு காசிம் காஷ்மீரி என்கிற ரியாஸ் அகமது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவல் கோட் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான்.
பாரதத்தில் இருக்கும் காஷ்மீரின் ஜம்மு பகுதியில் பிறந்தவன். பயங்கரவாத அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் 1999 ல் பாரதத்திலிருந்து விலகி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் குடியேறியவன். ஏகப்பட்ட காஷ்மீரி இளைஞர்களை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் தீவிரவாத மூளைச்சலவையும் செய்து ஜிகாதிகளாக மாற்றி அவர்களை வைத்து ஜம்மு காஷ்மீரில் ஏராளமான தாக்குதல்கள் சதிகளை அரங்கேற்றியவன். அதன் மூலம் இந்திய ராணுவத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பெருத்த உயிரிழப்புக்களையும் சேதத்தையும் ஏற்படுத்தியவன்.
காஷ்மீரின் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட லஷ்கரி இ தொய்பா தீவிரவாத கூட்டத்தின் முக்கிய தளபதி. ஜமாத் இ தாவா என்கிற அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருப்பவன். அனைத்து சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவன் . லஷ்கரி இ தொய்பா விவகாரங்களை முழுவதுமாக கவனித்து வந்தவன். இதன் காரணமாக அடிக்கடி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள முரிட்கேவி லில் இருக்கும் லஷ்கர் இ தொய்பா வின் தலைமையகத்திற்கு சர்வ சாதாரணமாக போய் வருபவன் . ஒசாமா பின்லேடனின் மறைவிற்குப் பிறகு காஷ்மீரின் விடுதலை பாரதத்திற்கு எதிராக செயல்படும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை ஒருங்கிணைக்கும் தலைவன் என்ற வகையில் ஒட்டுமொத்த தெற்காசிய பயங்கரவாத அமைப்புகளிலும் கோலோச்சியவன்.
காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு அது பாரதத்தின் ஒரு அங்கமாக பிரகடனப்படுத்தப்பட்டதில் மத்திய அரசின் மீதும் பாதுகாப்பு அமைப்புகள் மீதும் கடுமையான ஆத்திரம் எரிச்சல் கொண்டிருந்தவன். காஷ்மீரில் உள்ள இந்து மக்களின் மீது வெறுப்பையும் எதிர்ப்பையும் அங்குள்ள இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் விதைத்தவன் . அந்த வகையில் கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக ஜம்மு பகுதியில் இருக்கும் இந்துக்கள் மீது நடைபெறும் தொடர் தாக்குதலின் பின்னணியில் மூளையாக இருந்தவன்.
கடந்த ஜனவரி மாதம் தாங்கிரியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் 9 இந்துக்கள் கொல்லப்பட்டார்கள். ஒரு திருமண நிகழ்ச்சியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அங்குள்ள இந்துக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. அப்போதே இவனுக்கு முடிவு கட்ட நிச்சயம் ரா தேதி குறித்திருக்கும் என்று பேசப்பட்டது. ஆனால் அமெரிக்காவை விமான தாக்குதல் மூலம் தகர்க்க முயன்ற ஒசாமா பின்லேடனுக்கே சகல பாதுகாப்பும் வசதியும் செய்து கொடுத்து அப்போதாபாத்தில் பாதுகாத்தது பாகிஸ்தான். அப்படி இருக்க பாரதத்தில் பயங்கரவாத செயல்களை நிகழ்த்தும் இவனை எவ்வளவு ராஜ உபச்சாரத்துடன் பாதுகாத்து வந்திருக்கும் ? என்ற கேள்வியும் எழுந்தது. அதை எல்லாம் கடந்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வைத்தே இவன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான் எனில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பெயரளவில் தான் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது .ஆனால் அது முழுவதுமாக பாரதத்தின் கட்டுப்பாட்டில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த என்கவுண்டர் நிகழ்வே சாட்சி.
தேடப்படும் குற்றவாளியாகவும் பிடிப்பட காரணமாக இருப்பவர்களுக்கு சன்மானம் வழங்கும் வகையிலான பயங்கரவாதியாகவும் பாரத உளவுத்துறை பாதுகாப்புத் துறைகளால் அடையாளப்படுத்தப்பட்ட பயங்கரவாதி. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானின் பாதுகாப்போடு தங்கி இருந்தாலும் ராவல் கோட்டில் உள்ள அல் குத்தூஸ் மசூதிக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொழுகைக்கு வருவது அபு காசிமின் வழக்கம் . இந்த தொழுகைக்காக வியாழன் என்று இரவே மசூதிக்கு வந்து அங்கேயே தங்கியிருந்து வெள்ளிக்கிழமை தொழுகை முடித்துவிட்டு செல்வது வழக்கம். இதை துல்லியமாக கண்காணித்து கடந்த வியாழன் வியாழக்கிழமை இரவு வந்து தங்கி வெள்ளிக்கிழமை தொழுகையில் இருந்தபோது உடன் இருந்த இருவர் அபுகாசிமை சுட்டுக் கொன்று விட்டு தப்பி ஓடி இருக்கிறார்கள்.
பாகிஸ்தான் ஊடகங்கள் அபு காசிமை திட்டமிட்டு மசூதியில் வைத்து கொன்றது பாரதத்தின் ரா தான் என்று ஒப்பாரியில் இறங்கி விட்டது. அதற்கான வாய்ப்புகள் அதிகம் தான். காரணம் கடந்த காலங்களில் பாரதத்திற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்ட பல்வேறு பயங்கரவாதிகள் சர்வதேச அளவில் ஆங்காங்கே தொடர்ச்சியாக மரணித்து வருகிறார்கள். இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காந்த காருக்கு கடத்தப்பட்ட நிகழ்வில் மூளையாக செயல்பட்டவன் சில மாதங்கள் முன்பு கராச்சி நகரில் வைத்து பட்ட பகலில் சுட்டுக் கொல்லப்பட்டான் . அந்த வரிசையில் காஷ்மீரை முன்னிறுத்தி பாரதத்திற்கு எதிராக பெரும் பயங்கரவாத சதிகளையும் தாக்குதல்களையும் அரங்கேற்றியவன் அதே ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வைத்து அவனது சகாக்களாலே சுட்டுக் கொல்லப்படுகிறான் எனில் இது உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தும் விஷயம் தான்.
ஏனெனில் பாரதத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் திரு அஜித் தோவல் ஐபிஎஸ் அவர்கள் கடந்த காலங்களில் சுமார் 7 ஆண்டுகள் பாகிஸ்தானின் நிரந்தரமாக தங்கி இருந்து உளவுப் பணி பார்த்தவர் . அந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் முழுவதுமாக பொதுமக்கள் தொடங்கி அங்கிருக்கும் பயங்கரவாத இயக்கங்கள் ராணுவம் உளவுத்துறை வரையிலும் பாரதத்தின் சார்பான பல்வேறு உளவாளிகளை அவர் உருவாக்கி வைத்திருக்க கூடும் என்று பாகிஸ்தானும் இதர உலக நாடுகளும் வெளிப்படையாக சொல்லி வருகிறது.
அந்த உளவுப் பணியின் விதைகள் தான் தற்போது பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு பாரதத்திற்கு முழுமையான உளவு பணிகளை ஒருங்கிணைப்பதாக பேசப்படுகிறது. இப்பொழுது பாரத ராவின் உளவாளிகளின் சர்வ சாதாரணமாக இயங்கும் இடம் என்றால் அது பாகிஸ்தானும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் தான் என்று பாகிஸ்தானியர்களே பேசும் அளவில்தான் எதார்த்த நிலை இருக்கிறது.
அந்த வகையில் இந்தியாவின் ஒசாமா பின்லேடன் என்று பயங்கரவாதிகளே பட்டப்பெயர் வைத்து அழைக்கும் அளவில் இருந்த ஒரு பயங்கரவாதி. வெள்ளிக்கிழமை விடியல் என்ற பெயரில் தேசத்தை அச்சுறுத்தும் பல்வேறு நாச வேலைகளுக்கு கடந்த காலங்களில் மூளையாக இருந்த ஒரு நாச வேலை சதிகாரன். அவனது சகாக்கள் மூலம் சொந்த மண்ணிலேயே சுட்டுக் கொல்லப்படுகிறான் எனில் இது நிச்சயம் சாதாரண தனிமனித கொலையாக இருக்க வாய்ப்பில்லை. நன்கு பயிற்சி பெற்றவர்கள் கொண்டு திட்டமிடப்பட்ட சதியாகவே இருக்க முடியும் .அந்த வகையில் தேசத்திற்கு உள்ளும் புறமும் நாச வேலைகளில் ஈடுபட்டு உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்துபவர்களை வேட்டையாடும் இந்திய ராவில் ஒரு வேட்டையாக இந்நிகழ்வு இருப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகம். இனியும் இந்த வேட்டைகள் தொடர்வதற்கான சாத்தியங்களும் அதிகம். சர்வதேச நாடுகளிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த வேட்டைகள் தேசத்தின் உள்ளும் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் .