வரலாற்றாசிரியர் A.S.Bhide தொகுத்த தனது நூலான Whirl Wind – Propaganda வில் கூறியது போல சாவர்க்கரும் சர்ச்சைகளும் உடன் பிறந்தவை எனக் கூறியுள்ளார். அவர் தவிர அவரைப் பற்றி எழுதப்பட்ட அல்லது அவரது தொகுப்புகள் எழுதிய பல நூல்கள் ஆசிரியர்கள் குறிப்பாக வெளிநாட்டு வரலாற்றாசிரியர்கள் பலரும் இந்த கருத்தையே கூறு. எதிர்கால தேச நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்ட தீர்க்கதரிசி சாவர்க்கர்., அரசியல்வாதி ,சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டவர். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கண்களில் விரல்விட்டு ஆட்டிய ஒரு சில முக்கிய சுதந்திர போராட்ட வீரர்களில் அதிமுக்கியமானவரும் ஏனைய சுதந்திர போராட்ட வீரர்கள் பலரை உருவாக்கிய பெருமைக்குரியவர்மான இந்த வீர் சாவர்க்கர் யார் ???
1870 க்குப் பிந்திய காலகட்டத்தில் இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்ற எண்ணம் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை வளர்த்துக் கொள்வதில் மட்டுமே ஆர்வம் கொண்டு சமூகப் பொறுப்பு இல்லாமல் ஆங்கிலேய கிறித்தவ கோமான்களின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி, சமூகத்தின் வழிகாட்டியாக இருக்க வேண்டிய படிப்பறிவு கொண்டவர்கள் ,லண்டன் மாநகரில் பட்டம் பெறுவதே வாழ்நாள் லட்சியம் என்றும் போதையில் இருந்த சூழலில் ,
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பகூர் என்ற இடத்தில் 1883ம் ஆண்டு மே 28-ஆம் தேதி தாமோதர் சாவர்க்கருக்கும் ,ராதா அம்மையாருக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தவர்தான் வினாயக் தாமோதர் சாவர்க்கர். தாமோதர் சாவர்க்கர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த, சித்பவன் பிராமண இனத்தை சேர்ந்தவர் .இவர் ஆங்கில இலக்கியத்திலும், மராட்டிய இலக்கியத்திலும் புலமை பெற்றவர் .இவரது வழிகாட்டுதலில் சாவர்க்கரும் இளம் வயதிலேயே கவிதை எழுதுவதிலும், காவியங்கள் படிப்பதிலும் ஆர்வம் மிக்கவராக வளர்ந்தார். பாலகங்காதர திலகரின் கேசரி பத்திரிக்கையை அவர் தந்தை தொடர்ச்சியாக படித்து வந்தார். அந்த ஆர்வம் சாவர்கரையும் தொற்றிக்கொண்டது. சிறுவயதிலேயே மராட்டியர்களின் கதைகளைப் படித்ததனால் அவரிடம் தேசத்தைப் பற்றிய உயர்ந்த சிந்தனை மேலோங்க துவங்கியது. அதன் விளைவாக, அது தொடர்பாக தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறு சிறு விளையாட்டு நாடகங்க நடத்த தொடங்கினார். இந்தச் சூழலில் பிளேக் நோய் பாதிப்பினால் தந்தையை இழந்து ,குடும்பம் ஏழ்மையான சூழலிலும் தொடர்ச்சியாக மித்ரா மெளா அமைப்பை ஆரம்பித்து நடத்திக்கொண்டிருந்தார். எந்தச் சூழலிலும் கொண்ட கொள்கை அதன் செயல்பாடுகளில் எந்த தொய்வும் வந்துவிடக்கூடாது என்ற அவரது திண்ணம் ஆரம்பத்திலேயே இதன் மூலம் தெரிகிறது.
பின்பு 1901இல் பூனாவில் பர்கேஷன் கல்லூரியில் சேர்ந்து சாவர்கர் “அபினவ் பாரத்” என்ற புதிய அமைப்பை தொடங்கினார் அவரது ஆணித்தரமான உணர்ச்சிகரமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாக இருந்தது. அவரது அமைப்பில் ஆர்வமுடன் பலரும் இணைந்தனர் .அபினவ் பாரதத்தின் செயல் முறைகளைக் கண்ட காவல்துறை அந்த அமைப்பின் ரகசிய பிரமாணம் ஒரு எரிமலையை போன்றது, எந்த சமயத்திலும் இதை வளர விட்டால் தேசம் எங்கும் பரவி விடும் என ஆங்கிலேய அரசிற்கு குறிப்பு அனுப்பியது .ஒன்றை கவனிக்கவேண்டும் தனது பதினெட்டு வயதிலேயே அவர் ஆரம்பித்து அமைப்பைப் பார்த்து அதன் செயல்பாடுகளைக் கண்டு பயந்த ஆங்கிலேய அரசு பிற்பாடு எவ்வாறு கண்காணித்திருக்கும் என யுகிக்கலாம்
கல்லூரிகளில் சேருவது ,லண்டன் செல்வது என்பது வசதியான வாழ்க்கையை ஆங்கிலேயர்கள் காலடியில் இருந்து அனுபவிக்க வேண்டும் என்று திரிந்த கூட்டத்தின் மத்தியில், கல்லூரியில் சேர்வது எதிர்கால பாரதத்தை கட்டமைக்க கூடிய கொள்கையை வகுக்க வேண்டும், அதற்கு பலரை தயார் படுத்த வேண்டும் என்பதும், லண்டன் செல்வது ஆங்கிலேயர்களின் கோமான் களின் கீழ் அடிமைகளாக இருக்கும், சமூகத்தின் வழிகாட்டியாக இருக்க வேண்டிய படிப்பறிவு கொண்டவர்கள் அந்த கோமான் களின், நாட்டிற்கே சென்று வழிநடத்த வேண்டும். தேசியத்திற்கு ஆதரவாக்க வேண்டும் என்ற அவரது தொலைநோக்கு பார்வையை, அவர் பற்குசன் கல்லூரியில் படிக்கும்போது நடத்திய அபினவ் பாரத் அமைப்பின் செயல்பாடுகளில் உணர்ந்து கொள்ளலாம் .
லண்டனில் சட்டம் படிப்பதற்காக சென்றால் அங்கிருந்து உலக நாடுகளுடன் தொடர்பு கொண்டு சுதந்திரப் போராட்டத்திற்கு வலு சேர்க்கலாம் என்ற எண்ணம் கொண்டு கிருஷ்ண வர்மா என்பவர் உதவியினால் 1906 எல் லண்டன் சென்றார் சாவர்க்கர். அங்கு இந்தியா ஹவுஸில் தங்கியிருந்த அவர், செய்த செயல்பாடுகள் ஆங்கிலேய அரசை கதிகலங்க வைத்தன .சுதந்திரம் என்றால் என்ன என்று சிந்தனை கூட செய்யாத படிப்பறிவு கொண்டவர்களை மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆக மாற்றிய பெருமை அவரையே சாரும்.
ஒரே நாடு ஒரே இனம் ஒரே சட்டம் என்ற கொள்கை வரைவு அன்று அவரது அபிநவ பாரத் அமைப்பின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது .கோமானின் கோட்டையில் ஆயுதங்கள் வாங்கி ஆயுதப் பயிற்சி கொடுக்கும் தைரியம் யாருக்கு வரும். அதை செய்து காட்டியவர் சாவர்க்கர். ஆயுத பயிற்சி எடுத்தவர்கலில் முக்கியமானவர்கள் , வ் வே சு மதன்லால் திங்கரா போன்றவர்கள்
ஆங்கிலேய அரசு 1857-ல் நடந்த சிப்பாய் புரட்சியை கலகம் என்று வர்ணித்தனர் .லண்டனில் இருந்த கிருஷ்ண வர்மா (இவர் மூலமாகத்தான் சாவர்க்கரை லண்டன் சென்றார்) அதை முதல் சுதந்திரப் போராக கொண்டாட முடிவு செய்தார் 1905 மே 9ஆம் நாள் கொண்டாடப்பட்டது.1906 எல் சாவர்க்கரை லண்டன் வந்த பிறகு இந்த விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. 1857 கலகம் அல்ல ,அது முதல் சுதந்திர முழக்கம் என பல கூட்டங்களில் முழங்கிய சாவர்க்கர் 1909 இல் பல சிரமத்திற்குப் பிறகு முதல் இந்திய சுதந்திரப் போர் 1857 என்ற புத்தகத்தை எழுதினார். அதை ஆங்கிலேயே அரசு தடை செய்து பல இன்னல்களை கொடுத்தது . இதை பற்றியே நமது உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜி சமீபத்திய தேர்தல் கூட்டத்தில் பேசினார்.
சாவர்கரிடம் துப்பாக்கிப் பயிற்சி பெற்ற மதன்லால் திங்கிரா கார்சன் வலியை சுட்டு கொன்ற பிறகு நடந்த சட்ட சிக்கல்கள் சாவர்கறுக்கு எதிராக திரும்பியது. அவரது செயல்பாடுகளை முடக்கி கைது செய்ய தீவிரம் காட்டியது பிரிட்டிஷ் அரசு.1910 பிப்ரவரி எட்டாம் தேதி சாவர்க்கர் கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு விசாரணைக்காக பிரிட்டிஷ் அரசினால் அனுப்பப்பட்டார்..
சாவர்க்கர் லண்டன் வரும்போது அவர் வயது 22 அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட போது அவரது வயது 26 இந்த நான்கு வருடங்களில் அவரது பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான செயல்பாடுகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தன. அமெரிக்கா சீனா ,பிரான்ஸ் ,அயர்லாந்து ஆகிய வெளிநாட்டு பத்திரிகைகள் அவரைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டன . பிரிட்டனுக்கு எதிராக தீவிரமாக செயல் படுபவர்களை அன்றைய மிதவாத காங்கிரஸ் எப்படி நடத்தி இருக்கும் என நாம் ஊகிக்கலாம்.
சாவர்க்கர் இந்தியா அழைத்து வரப்பட்ட கப்பலிலிருந்து சுதந்திரப் போராட்ட வரலாற்றில் யாரும் செய்யாத தைரியமான செயலைச் செய்தார். கப்பலிலிருந்து குதித்து நீண்ட தூரம் நீந்தி சென்று பிரான்ஸ் நாட்டில் சென்றுவிட்டார். ஆனால் விதியின் விளைவாக பிரெஞ்ச் போலீசுக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தினால், அவர்கள் பேசுவது புரியாமல் துரத்தி வந்த பிரிட்டன் காவலரிடம் ஒப்படைத்த விட்டனர். அன்று அது நடக்காமல் இருந்தால் இந்திய சுதந்திரப் போராட்ட சூழலே மாறியிருக்கும் .சாவர்க்கர் பின்பு இந்திய சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்றம் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்து அந்தமான் சிறைக்கு அனுப்பியது. சிறையில் பல இன்னல்களை அனுபவித்த சாவர்க்கர் தாய் நாட்டு விடுதலைக்கு ஏதாவது செய்துகொண்டே இருக்கவேண்டும் என்ற நெஞ்சுறுதியினால் அனைத்தையும் தாங்கிக் கொண்டார். பின்பு 1922 எல் பிரிட்டிஷ் அரசினால் விடுதலை செய்யப்பட்டு இந்தியாவில் காலடி எடுத்து வைத்தார். பின்பு இந்தியாவில் ரத்நகிரி சிறையில் இரண்டு வருடம் அடைக்கப்பட்டு 1924 சனவரி 6 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டார் .14 வருடம் தொடர்ச்சியாக சிறைவாசம் அனுபவித்த சாவர்க்கர் தாய்நாட்டின் விடுதலைக்காக தனது யுக்தியை வேறுவிதமாக மாற்றினார் .இந்து மகாசபா பொறுப்பை ஏற்றுக் கொண்ட சாவர்க்கர் சமூக நீதி பரிபாலனை செய்வதிலும் இந்து ஒற்றுமையை ஏற்படுத்தும் கவனம் செலுத்தினார். இத்தகைய புகழ்மிக்க சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்து பாரத ரத்னா விருதை பெருமைப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் ஆவலாக இருக்கிறது.
இரா. இராமலிங்கம்,
வழக்கறிஞர்,
வரலாற்று ஆய்வாளர்.