கடந்த காலங்களில் இருந்த தமிழக பாஜக தலைமைகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மறைமுக நெருக்கடிகள் இதன் காரணமாக பாஜகவின் உள்ளே எழுந்த சிக்கல். கட்சி வளராத நிலை கட்சித் தொண்டர்களுக்கு கட்சி தலைமையின் மீது நம்பிக்கை இன்மை களப்பணி செய்ய வரும் கட்சிகளை அரவணைக்கும் தலைமை இல்லாமல் என்று ஒட்டுமொத்த குழப்படிகளில் மையமாக தமிழக பாஜக இருந்து வந்தது. ஆனால் இங்கு இருக்கும் சூழல் கட்சிக்கு வேலை பார்ப்பதற்கு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு தலைமை இல்லாத வெற்றிடம் திராவிட கட்சிகளை துணிச்சலோடு எதிர் கொண்டு பாஜகவிற்காக மட்டுமே முழுமூச்சாக வேலை செய்யும் தன்னலமற்ற ஒரு தலைமை இல்லாத தொண்டர்களின் ஏக்கம் என்று அனைத்தையும் உள்வாங்கிக் கொண்ட தேசிய பாஜக தலைமை தமிழகத்தின் பூர்வ குடி வம்சத்தில் பிறந்து வளர்ந்து தேசியத்திற்கும் தெய்வீகத்திற்கும் பெயர் போன கொங்கு மண்டலத்திலிருந்து ஒரு தலைமையை தமிழக பாஜகவிற்கு தயார் செய்ய தொடங்கியது. பத்தாண்டு காலம் காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்த அனுபவம் நேர்மையான துணிச்சலான அதிகாரி என்ற பெயரெடுத்த பின்னணி என்று அனைத்தும் உள்ள எந்த சிக்கலையும் எதிர்கொண்டு எந்த வியூகத்தையும் தவிடு பொடியாக்கி தமிழக பாஜகவை மக்கள் மனதில் கொண்டு போய் சேர்க்கவும் தமிழகத்தில் சூழ்ந்திருக்கும் உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டவும் ஒரு வலுவான தலைமையை தமிழக பாஜகவிற்கு இறக்கியது.
கழகங்கள் இல்லாத கூட்டணி. இலவசம் வாக்கு வங்கி பரிசு பொருள் இல்லாத பண பலம் இல்லாத நேர்மையான அரசியல் என்பதை முன்னெடுக்கும் தமிழக பாஜக தலைவரை இந்த திடமான உறுதிப்பாடு கடைக்கோடி பாஜக தொண்டனை கடந்து நடுநிலை வாக்காளர்கள் நேர்மையான அரசியலை விரும்பும் இளைய தலைமுறை என்று அனைவரையும் தமிழக பாஜக தலைவரின் பக்கம் இழுத்து வந்தது. இது தேசிய பாஜக தலைமையையும் தமிழகத்தில் இருக்கும் பாஜக தொண்டர்களையும் இதர இந்து அமைப்புகளையும் பெரும் நம்பிக்கை கொள்ளச் செய்தது. ஆனால் திமுக அதிமுக என்று ஏதாவது ஒரு கட்சியோடு கூட்டணியில் இருந்து எப்படியாவது எம்எல்ஏ எம்பி என்று தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் . அதன் மூலம் மாநிலத்திலோ மத்தியிலோ ஏதேனும் ஒரு பதவி பெற்று நம் காலத்தை ஓட்டிவிடலாம் என்று இருந்த பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு தமிழக பாஜக தலைவரின் இந்த திராவிட கட்சிகளோடு கூட்டணி வேண்டாம் என்ற நிலைப்பாடு அதிர்ச்சி அளித்தது .அவரவர்கள் அவரவர் விருப்பம் செல்வாக்கு அடிப்படையில் தமிழகத்தில் இருக்கும் திராவிட கட்சிகளுக்கும் திராவிட கட்சிகளின் சார்பாக தேசிய பாஜகவிலும் பல்வேறு லாபிகளை செய்தார்கள்.
பல ஆண்டுகளாக இருக்கும் இடம் தெரியாமல் இருந்த தமிழக பாஜகவை இரண்டு ஆண்டுகளில் பட்டி தொட்டி முழுவதும் கொண்டு போய் சேர்த்தவர் தமிழகத்தில் இருக்கும் மத பயங்கரவாதம் பிரிவினைவாதம் அத்தனையையும் ஆதாரப்பூர்வமாக வெளிக்கொணரும் என் ஐஏ உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு தேசிய பாதுகாப்பு முகமைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருபவர். மாநில ஆளுநராக பணியாற்றும் உளவுத்துறை பின்னணி கொண்ட நபருக்கு முழுமையான நம்பிக்கையான தளபதியாக செயல்படுபவர் என்று பல்வேறு வகையில் மாநில கட்சி தலைவர் என்ற நிலையும் கடந்து தேசத்தின் பாதுகாப்பு மாநிலத்தின் பாதுகாப்பு கட்சியின் வளர்ச்சி என்று முழுமையான பங்களிப்பை வழங்கும் தமிழக பாஜகவின் தலைவரை அவரை எப்படியாவது அந்த பதவியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் முடிந்தால் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்று திமுக அதிமுக கட்சிகள் நினைப்பதும் அவர்களுக்கு பல்வேறு உதவிகள் பாஜகவில் இருந்தே கிடைப்பதும் தமிழக பாஜகவில் கடந்த காலத்தில் என்ன நடந்தது ? .திராவிட கட்சிகளின் செல்வாக்கு எந்த அளவில் தமிழக பாஜகவை சீரழித்தது? தமிழக பாஜகவில் தலைமைக்கும் தொண்டர்களுக்கும் இடையில் இருந்த இடைவெளிக்கு என்ன காரணம்? தமிழகத்தில் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பாஜக தொண்டர்கள் ஆர் எஸ் எஸ் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் பல்வேறு நபர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதும் அதன் காரணமாக தமிழகத்தில் இந்துக்கள் இந்து அமைப்பின் நிர்வாகிகள் தலைவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்ச்சியாக இருந்தது என்ற அத்தனை பின்னணியையும் முழுமையாக தேசிய பாஜக உள்வாங்கிக் கொண்டது. தமிழக பாஜக தலைவரை முழு சுதந்திரமாக இயங்க அனுமதித்தது. தமிழகத்தில் இருக்கும் கடை கோடி தொண்டனும் விரும்பாத திராவிட கூட்டணியை துறப்பதற்கு தயாராகிவிட்டது.
தமிழக பாஜக தலைவரின் கடந்த கால செயல்பாடுகளும் வியூகங்களும் தமிழகத்தின் நலனையும் பாஜகவின் நலனையும் கடைக்கோடி தொண்டன் பாதுகாப்பு உறுதி செய்தது. அந்த வகையில் எதிர்வரும் காலத்திலும் தமிழக பாஜகவும் அதன் தலைவரும் எடுக்கும் அரசியல் வியூகங்கள் தேர்தல் நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்தில் தமிழகத்தில் இலவசம் வாக்கு வங்கி வாக்களிக்க பணம் பரிசு பொருட்கள் இல்லாத நேர்மையான அரசியலை தமிழக மக்களுக்கு ஒரு முறை அடையாளம் காட்டும். அந்த நேர்மையான அரசியலையும் ஜனநாயக உரிமையின் பெயரில் வாக்களிக்க வேண்டும் என்ற உணர்வையும் தமிழக மக்களுக்கு ஒரு முறை பாஜக உணர்த்திவிட்டால் அதன் பிறகு வாக்களிக்கும் ஜனநாயக கடமையில் மட்டுமே வாக்களித்து ஆட்சியாளர்களிடம் நேர்மையான நல்லாட்சியை மட்டுமே தமிழக மக்களும் ருசிப்பார்கள். அது நடந்தால் இனி எந்த காலத்திலும் தமிழகத்தில் சிறுபான்மை வாக்கு வாங்கி அரசியல் எடுபடாது . தேர்தலில் என்றாலே திருவிழா போல கூட்டம் கூட பணம் போராட்டத்தில் பங்கேற்க கை காசு கறிசோறு என்ற அவலம் வாக்களிக்க பணம் பரிசுப் பொருள் என்ற ஜனநாயக படுகொலை எல்லாம் காலாவதி ஆகும். அப்போது பொதுவாழ்வில் நேர்மையும் தூய்மையும் கட்டாயம் என்ற நிலை அரசியல்வாதிகளுக்கு வரும்.
நேர்மையான அரசியல்வாதிகளை ஆதரித்து அப்பழுக்கில்லாத ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர்த்தினால் மட்டுமே தங்களின் தேசமும் எதிர்கால சந்ததியும் நலம் பெறும் என்ற எண்ணமும் பொறுப்பும் தமிழகத்தில் மக்களிடையே மேலோங்கும் . அது மட்டுமே எதிர்காலத்தில் ஆரோக்கியமான அரசியலுக்கும் நேர்மையான தேர்தலுக்கும், வழிகோலும் இதை அத்தனையும் சாத்தியமாக வேண்டிய பெரும் சவால் தமிழக பாஜகவின் தலைவருக்கும் அவருக்கு துணை நிற்க முழு ஒத்துழைப்பு கொடுத்து வரும் கட்சியின் நிர்வாகிகள் இந்து அமைப்பு தலைவர்கள் கூட்டணி கட்சியின் தலைவர்கள் என்று அத்தனை பேருக்கும் இருக்கிறது. இவர்களின் வியூகங்களுக்கெல்லாம் முழு ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் வழங்க வேண்டிய தலையாயக் கடமை தேசிய பாஜகவிற்கு இருக்கிறது. இது அத்தனையையும் தேர்தல் வெற்றியாக மாற்றிக் காட்ட வேண்டிய பொறுப்பு தமிழகத்தில் இருக்கும் பாஜகவின் தொண்டனைக் கடந்து இங்கு இருக்கும் ஒவ்வொரு தேசியவாதிக்கும் கூட இருக்கிறது. அனைவரும் அவரவர் கடமையை உணர்ந்தால் தமிழகத்தில் லஞ்சம் ஊழல் இல்லாத நேர்மையான அரசியல் அரசியல். துஷ்பிரயோகம் அதிகாரக் கொள்ளை இல்லாத ஆட்சியாளர்கள் என்ற வளமான தமிழகம் நிச்சயம் சாத்தியமாகும்.
தமிழக பாஜக தலைவரின் கட்சிப் பணிகளையும் தடுக்க முடியவில்லை. அவர் மீது தனிப்பட்ட முறையில் அவதூறு தனிமனித தாக்குதல் நடத்தினாலும் அவர் எதற்கும் அஞ்சவில்லை. அவரின் கடந்த கால செயல்பாடுகளை வைத்து ஏதேனும் அவதூறு பேசலாம் என்றால் அதற்கும் வழியில்லை . அவரின் பின்னணி அவருக்கு முழு பலம் சேர்க்கும் வகையில் இருந்தது வேறு வழி இல்லை. என்ற பட்சத்தில் தங்களின் ஊடக பலம் கொண்டு அவரை சாய்க்க முயன்றதில் கடந்த காலத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சரித்தது போல திட்டமிட்டு சரிக்க பார்த்தார்கள் .ஆனால் ஊடகங்களை அவர்களின் போக்கில் ஆடவிட்டு வேடிக்கை பார்த்த தமிழக பாஜக தலைவர் ஒரு கட்டத்திற்கு பிறகு மக்கள் முன் ஊடகங்களின் உண்மை முகத்தை போட்டு உடைத்து அதே ஊடகங்களை சரித்து காட்டினார்.அந்த வரிசையில் மத இன மொழி பிரிவினை மதபயங்கரவாதம் இல்லாத அரசியல் களம் இலஞ்சம் ஊழல் அதிகார துஷ்பிரயோகம் இல்லாத மக்களாட்சியையும் அண்ணாமலை என்ற அடுத்த இலக்கையும் சாதித்து காட்டுவார் என்ற நம்பிக்கையில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து தரப்பிலும் அண்ணாமலை மீது பாஜக மீது நம்பிக்கை நல்லெண்ணம் வருகிறது. எப்படி தமிழகத்தில் அதிமுகவின் கட்சி தலைமை கூடி அதிகாரப்பூர்வமாக முடிவெடுத்து பாஜக அதிமுக கூட்டணி முடிந்ததை வெளிப்படையாக அறிவித்தது. அதே வகையில் தேசிய பாஜகவும் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூடிய விரைவில் வெளியிடும். அதன் பிறகு தமிழகத்தில் திராவிட கல் ப்பில்லாத தேசிய பாஜக தலைமையில் தமிழகம் நேர்மையான அரசியல் தேர்தல் களத்தை நோக்கி நகரும்
மோடி அரசு நலத் திட்டங்கள் மற்றும் தேச பாதுகாப்பு தேசிய இறையாண்மை பற்றிய புரிதல் வந்திருக்கிறது. விளைவு சாமானியன் முதல் மேல் தட்டு வர்க்கம் வரை எப்படி கடந்த காலங்களில் நேதாஜி தேவர் காமராஜர் எம்ஜிஆர் பின் தொடர்ந்தார்களோ அந்த வரிசையில் இன்று தமிழகத்தில் பாஜக என்ற கட்சி பின் அண்ணாமலை என்ற தனிமனிதனை நம்பி திரள்கிறார்கள். அவர்கள் கட்சி அரசியல் கடந்து மத்தியில் மீண்டும் மோடியின் நல்லாட்சி தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் தாமரை ஆட்சி என்று தெளிவாக தீர்க்கமாக தான் பின் தொடர்கிறார்கள். அதை தேசிய பாஜக தமிழக பாஜக முதல் கடைக்கோடி தொண்டன் வரை புரிந்து கொண்டார்கள். பாஜக கட்சி கடந்து திராவிடமும் புரிந்து கொண்டது. அதன் வெளிப்பாடு தான் திராவிட ஆதரவாளர்கள் கதறல். அவர்கள் கடந்து எதிரொலிக்கும் தமிழக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் நேற்று முதல் பாஜக அதிமுக கூட்டணி முறிவை வெற்றி திருவிழா போல கொண்டாடி மகிழும் காவிகள் கொண்டாட்டம். இதில் தமிழகத்தில் இருக்கும் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தேசிய வாதிகள் மற்றும் ஆன்மீக வாதிகளும் பங்கேற்பது தான் திராவிடம் வீழ்ந்து தமிழகத்தில் தேசியம் மலரத் தொடங்கியதன் சாட்சியம்.