நெஞ்சு பொறுக்குதில்லையே : வீடுகளை நொறுக்கி பூர்வகுடி மக்களை பலவந்தமாக வெளியேற்றிய கொடூரம் !

நெஞ்சு பொறுக்குதில்லையே : வீடுகளை நொறுக்கி பூர்வகுடி மக்களை பலவந்தமாக வெளியேற்றிய கொடூரம் !

Share it if you like it

பூர்வக்குடி மக்களின் இருப்பிடமாக விளங்குகின்ற பகுதிகளில் இருந்து அவர்களை விரட்டி அடிக்கும் ஒரு வீடியோ காட்சியை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு வனத்துறையினரின் அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் பதிவில்,

தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் ஒகேனக்கல் வனப்பகுதி பூர்வகுடி மக்களை, தமிழக வனத்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் செய்தியும் காணொளிகளும், மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

பூர்வகுடி மக்களின் உடைமைகளைத் தூக்கி எறிந்தும், கூரையைப் பிரித்து எறிந்தும், பெண்கள், குழந்தைகள் என்று கூடப் பாராமல், பலவந்தமாக வெளியேற்றியிருக்கின்றனர்.

மக்களின் பணத்தை ஊழல் செய்து கொள்ளையடிப்பவர்களையும், கள்ளச்சாராயம், போதை மருந்து கடத்துபவர்களையும் கண்டுகொள்ளாத திமுக அரசு, ஏழை எளிய மக்களின் மீது மட்டும் தங்கள் அதிகாரத்தைக் காட்டி மிரட்டி வருகிறது.

வனப்பகுதி, பூர்வகுடி மக்களுக்கானது. அவர்களுக்கு முறையான வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல், அதிகார துஷ்பிரயோகம் செய்து அகற்றும் திமுக அரசின் இந்த அடக்குமுறைக்கு, வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண பாமர ஏழை மக்கள் வாழ வழியில்லாமல் காட்டிலோ மேட்டிலோ ஒருவேளை கஞ்சி குடித்து வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அவ்விடத்தில் வசிப்பது தவறென்று கருதினாலும் அதனை முறையாக சொல்லி வெளியேற சொல்லி இருக்கலாமே ? எதற்காக இந்த பலவந்தம் ? வனத்துறை அதிகாரிகளே உங்களின் வீரத்தை ஏழைகளிடம் தான் காட்ட வேண்டுமா ? வசதி படைத்தவர்களிடத்தில் வளைந்து போவதும் ஏழைகளிடத்தில் திமிறுவதும் தான் அறமா ?


Share it if you like it