ஜெயபால் – ராஜலட்சுமி பழங்குடி தம்பதியை டெல்லி குடியரசு தின விழாவில் விவிஐபி-யாக பங்கேற்க வைத்த மத்திய அரசு !

ஜெயபால் – ராஜலட்சுமி பழங்குடி தம்பதியை டெல்லி குடியரசு தின விழாவில் விவிஐபி-யாக பங்கேற்க வைத்த மத்திய அரசு !

Share it if you like it

கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த ஜெயபால் – ராஜலட்சுமி பழங்குடி தம்பதியை குடியரசு தின விழாவில் விவிஐபி-யாக பங்கேற்க மத்திய அரசு அழைத்துள்ளது. டெல்லியில் இன்று 26-ம் தேதி நடந்த குடியரசு தின கொண்டாட்டங்களில் அவர்கள் இருவரும் விவிஐபிகளாக பங்கேற்றனர்.

யார் இந்த தம்பதிகள் :-

வால்பாறை மாவட்டம் கல்லார், கவர்க்கல், உடுமன்பாறை, நெடுங்குன்றா உள்ளிட்ட வன கிராமங்களில் காடர் பழங்குடியின மக்கள் உள்ளனர்.

2019 மழைக்காலத்தில் கல்லார் மக்களின் குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டதால், குடியிருக்க மாற்று இடம் கேட்டு காடர் பழங்குடியினர் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தினர். காடர் பிரதிநிதிகளாக ஜெயபால் – ராஜலட்சுமி தம்பதியர் இதனை முன்னின்று நடத்தினர். 2021 சுதந்திர தினத்தில், கல்லார் தெப்பக்காடு பகுதியில் தாங்கள் குடிசை அமைக்க தேர்வு செய்த இடத்தில் காட்டில் குடியேறி காடர் பழங்குடிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தீர்வு கிடைக்காததால் ஜெயபால் – ராஜலட்சுமி தம்பதி தலைமையில் மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கல்லார் மட்டுமின்றி, 4 கிராமங்களிலும் 120க்கும் மேற்பட்ட பழங்குடிகளுக்கு அரசு பட்டா வழங்கியது.

இதனை அஹிம்சை வழியில் சாதித்துக் காட்டியதற்காக ஜெயபால் – ராஜலட்சுமி தம்பதியை கவுரவிக்கும் விதமாகவே குடியரசு தின விழாவில் பங்கேற்க மத்திய அரசு அழைத்துள்ளது. போராடி நிலத்தை பெற்றிருந்தாலும், வசிக்க வீடு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Share it if you like it