நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே லிட்டருக்கு ₹5 மற்றும் லிட்டருக்கு ₹10 குறைத்தது.
பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம், மத்திய அரசு மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே லிட்டருக்கு ₹8 மற்றும் லிட்டருக்கு ₹6 குறைத்தது.
இன்று, நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் 2 ரூபாய் குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த விலைக்குறைப்பு, நாளை முதல் அமலுக்கு வருகிறது.
கடந்த 28 மாதங்களில், நமது மத்திய அரசு, பெட்ரோல் விலையில் 15 ரூபாய் மற்றும் டீசல் விலையில் 18 ரூபாய் குறைத்துள்ளது.
திமுக, தனது தேர்தல் வாக்குறுதியாக, பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் எனக் கூறி, ஆட்சிக்கு வந்து 35 மாதங்கள் கடந்தும், இதுவரை அதனை நிறைவேற்றவில்லை. திரு.ஸ்டாலின் அவர்களே, நீங்கள் எப்போது தூக்கத்திலிருந்து விழிக்கப் போகிறீர்கள்?