உலக அளவில் தமிழர்களின் மானத்தை வாங்கிய விளம்பர முதல்வர்..!

உலக அளவில் தமிழர்களின் மானத்தை வாங்கிய விளம்பர முதல்வர்..!

Share it if you like it

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல். மத்திய அரசு மீது பழி போட்டு. தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் விடியல் தராத அரசு மிக தீவிரமாக இறங்கியுள்ளது என்பது மக்களின் எண்ண ஒட்டமாக இன்று வரை இருந்து வருகிறது.

விளம்பர முதல்வருக்கு ஒத்து ஊதும் விதமாக., மு.க.பணியாளர்கள் முதற்கொண்டு மேலிடத்தில் இருந்து பிஸ்கட் வாங்கும் நெறியாளர்கள் வரை. தமிழக மக்களை காக்க வந்த ஆண்டவர் ஸ்டாலின் தான் என்னும் ஒரு பொய் பிம்பத்தை மக்கள் மீது திணிக்க இன்று வரை முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் உலக புகழ் பெற்ற ஸ்கை நீயூஸ் என்னும் ஊடகம் இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றும், உயிரிழப்பும், அதிகரித்து வருகிறது எனவும். தமிழக முதல்வர் குறித்தும் கடும் விமர்சனம் செய்து உள்ளனர்.

இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக மக்களின் மானத்தை உலக அளவில் வாங்கிய ஒப்பற்ற ஒரே தலைவர் ஸ்டாலின் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it