ஊரடங்கு உத்தரவினை துளியும் மதிக்காமல் பெருங்குடி அரசு அலுவலகத்தில் ஸ்டாலின் புகைப்படத்தை வைக்க கும்பலாக சென்ற கழக கண்மணிகள்..! 

ஊரடங்கு உத்தரவினை துளியும் மதிக்காமல் பெருங்குடி அரசு அலுவலகத்தில் ஸ்டாலின் புகைப்படத்தை வைக்க கும்பலாக சென்ற கழக கண்மணிகள்..! 

Share it if you like it

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே ரேஷன் கடைகளை தி.மு.க அலுவலகம் போல் மாற்றுவது, அரசு அதிகாரிகளை கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து பேசுவது என இவர்களின் அராஜகம் தொடர்ந்து எல்லை மீறி செல்வதை தமிழக மக்கள் கவனித்து கொண்டு இருக்கின்றனர் என்பது நிதர்சனம்.

அதன் தொடர்ச்சியாக பெருங்குடி மண்டல அலுவலகத்திலும் தி.மு.கவினர் நேற்று அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். அலுவலக கூட்ட அறையில், திடீர் என நுழைந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று கோஷமிட்டுள்ளனர். பின், பல அறைகளை ஊர்வலம் போல் சுற்றி வந்து பின்னர் புறப்பட்டு சென்று உள்ளனர். சமூக இடைவெளி துளி கூட இல்லாமல் நடந்த இச்சம்பவம் அங்கு அரங்கேறியுள்ளது.

இதில் பலர்  முக கவசம் கூட அணியவில்லை. முழு ஊரடங்கு காலத்தில், தி.மு.க.,வினர் இது போன்று கூட்டமாக வந்து அட்டகாசம் செய்தது, மண்டல அலுவலக ஊழியர்களிடம் பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பெருங்குடி அரசு அலுவலகத்தில் தி.மு.கவினர் செய்த அராஜகம் குறித்து எந்த ஒரு முன்களபணியாளர்களும் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it