அரசுப்பள்ளி வளாகத்தை மழைநீர் சூழ்ந்ததால் திருமண மண்டபத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள்

அரசுப்பள்ளி வளாகத்தை மழைநீர் சூழ்ந்ததால் திருமண மண்டபத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள்

Share it if you like it

தமிழகத்தில் மாநிலம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் நடந்து வருகிறது. அரசு தனியார் பள்ளிகள் மத்திய பாட வழியிலான பள்ளிகள் இன்று அனைத்திலும் காலாண்டு தேர்வுகள் அல்லது முதல் நிலை தேர்வுகள் இந்த காலகட்டத்தில் நடைபெறுவது வழக்கம். அந்த வரிசையில் மாநிலம் முழுவதும் தமிழக அரசு பள்ளிகளில் மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பாக காலாண்டு பரீட்சைகள் நடந்து வருகிறது. திருவள்ளூர் அடுத்த கனகம்மா சத்திரம் பகுதியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் அங்கு மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டு அருகில் இருந்த திருமண மண்டபத்தில் மாணவ மாணவிகள் தேர்வு எழுதி இருக்கிறார்கள்.

மழைக்காலங்களில் திடீர் மழை வெள்ளம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது. தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வேறொரு நாளில் தேர்வுகள் நடத்தப்படுவது எல்லாம் சகஜமான விஷயங்கள் தான் . ஆனால் இந்த ஆண்டு பெரும்பாலும் பருவ மழை பொய்த்து விட்டது என்றே சொல்லலாம் . இன்னும் சில மாதங்கள் போனால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ? என்ற நிலையில் தான் மாநிலத்தின் நீராதாரங்கள் நிலை இருக்கிறது . பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி கனமழையோ அதிக கன மழையோ இல்லை. அபூர்வமாக ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்திருக்கிறது. அதில் சில இடங்களில் நலிந்த மரங்கள் கிளைகள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது .அவ்வளவே . மற்றபடி வெள்ள அபாயம் ஏற்படும் படியான பெரும் மழையோ அதன் காரணமான வெள்ளப்பெருக்கோ இதுவரையில் இல்லை. அதற்கான அறிகுறிகளும் இதுவரையில் தமிழகத்தில் இல்லை .

இந்த ஒரு நாள் மழை சில மணி நேரங்கள் மழைக்கு மாநிலம் முழுவதும் ஆங்காங்கே வெள்ளநீர் சூழ்ந்து இருக்கிறது. இதன் காரணமாக சாலைகளில் கழிவு நீரும் மழை நீரும் கலந்து சாலை முழுவதும் பெருக்கெடுத்து ஓடி வாகன ஓட்டிகளை சிரமத்துக்குள்ளாக்குகிறது . சாலைகளில் பயணிப்பவர்கள் துர்நாற்றம் சுகாதாரக் கேடு உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. குடியிருப்பு பகுதிகள் மருத்துவமனைகள் சாலைகள் வீடுகள் என்று திரும்பிய பக்கமெல்லாம் மழை நீர் குட்டைகளாக தேங்கி நின்று அச்சுறுத்துகிறது.மாநிலம் முழுவதும் சுகாதார சீர்கேடுகள் டெங்கு மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவலாக வரத் தொடங்கி இருக்கிறது. பள்ளிகளில் தேர்வு காலம் சீதோஷன அடிப்படையில் மழைக்காலம் என்பதால் பெற்றோர்கள் மத்தியில் மாநிலம் முழுவதும் குழந்தைகள் சுகாதாரம் ஆரோக்கியம் பற்றிய ஒரு அச்சம் நிலவுகிறது. உரிய மழை நீர் வடிகால் இல்லாததும் அந்த வடிகால்கள் முறையாக பராமரிப்பு செய்யப்படாமல் அலட்சிய காட்டுவதும் தான். இவ்வளவு சுகாதார சீர்கேட்டிற்கும் காரணம்.

இந்த ஒரு நாள் மழைக்கே ஒரு சில மணி நேரம் வரைக்கும் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் தான் தமிழகத்தின் சாலைகளும் மழை நீர் வடிகால் கட்டுமானங்களும் உள்கட்டமைப்பு வசதிகளும் இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் திருவள்ளுவரின் மாணவர்கள் திருமணம் மண்டபத்தில் தேர்வு எழுதிய நிலையின் வெளிப்பாடு. மழைக்காலம் வருவதற்கு முன்பாக நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இருக்க வேண்டும். நீர் வழி தடங்கள் மற்றும் மழை நீர் வடிகால் தடங்கள் உரிய முறையில் தூர்வாரப்பட்டு மராமத்து பணிகள் செய்து பாதுகாக்கப்பட்டு இருக்க வேண்டும். தேவையான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தால் அதை உடனடியாக வெளியேற்றுவதற்கு தேவையான உபகரணங்கள் தொழில்நுட்பங்களை கையிருப்பில் வைத்து வெள்ள பாதுகாப்பை உறுதி செய்து இருக்க வேண்டும்.

ஆனால் இது எதையுமே செய்யாத மாநில அரசின் அலட்சியம் காரணமாக சாதாரண மழைக்கு கூட தமிழகம் தாக்குப் பிடிக்க முடியாது என்ற அவலமான நிலை வந்திருக்கிறது. மாணவர்களுக்கு தேர்வு காலம் நெருங்குகிறது. கூடவே மழைக்காலமும் அதன் மூலம் சுகாதார சீர்கேடுகளும் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிந்து கூட அதற்கு உரிய எந்த ஒரு கூட்டு முயற்சிகளோ ஒத்துழைப்போ இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கோ மாநில சுகாதாரத் துறை அமைச்சருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் நேரமில்லை. இதையெல்லாம் கண்காணித்து அமைச்சர்களை முடுக்கிவிட்டு துறை வாரியாக நிர்வாகங்களை சீர் செய்ய வேண்டிய மாநில முதல்வர் அவரது மகனின் சனாதன ஒழிப்பு பேச்சிருக்கும் கருத்திற்கும் ஆதரவு திரட்டும் முயற்சியில் மும்முரமாக இருக்கிறார். ஈடில்லா ஆட்சி அதற்கு இரண்டு ஆண்டுகளே சாட்சி என்று திரும்பிய பக்கமெல்லாம் விளம்பர பதாகைகள் வைத்து அதன் மூலம் தற்பெருமை தேடிக் கொண்டிருக்கிறார்.

சுகாதாரத்துறை அமைச்சர் ஆட்சியாளர்களை தான் சார்ந்த கட்சியின் தலைமை குடும்பத்தை மகிழ்விக்கும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழா தொடர் ஓட்ட பந்தயங்கள் ஆங்காங்கே சிறப்பு நிகழ்ச்சிகள் என்று பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சரோ கட்சியின் இளவல் அடுத்த தலைவர் மாநில அரசின் இளவரசராக வலம் வரும் உதயநிதி அடுத்தடுத்த திரைப்படங்கள் அதன் வெளியீடு விளம்பர மேம்பாடு என்று முழு நேரம் தனது ரசிகர் மன்ற தலைவர் பொறுப்பிலேயே மூழ்கிக் கிடக்கிறார். மாநிலத்தின் முக்கிய இரண்டு அமைச்சர்களை அவர்களின் பொறுப்புகளை மறந்து போனதன் விளைவு அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் நுழைய முடியாமல் அருகில் இருக்கும் திருமண மண்டபத்தில் தேர்வு எழுத வேண்டிய நிலை நேரிட்டிருக்கிறது.

பள்ளிகளில் காலை உணவு வழங்குகிறோம் .மாலை சிற்றுண்டி வழங்குகிறோம் என்று புதிது புதிதாக திட்டங்கள் துவங்கி மாணவர்களையும் பெற்றோர்களையும் அலைக்கழித்து அதன் மூலம் ஆதாயம் தேடுவதை விட்டுவிட்டு இருக்கும் பள்ளிகளையும் அதன் நிர்வாகத்தையும் கட்டமைப்புகளையும் சீர் செய்தாலே உண்மையில் நல்லாட்சி என்ற பெயரையும் அடையாளத்தையும் மக்கள் மத்தியில் பெற முடியும். மாணவர்களின் பள்ளி கல்வி அவர்களின் ஆரோக்கியம் நலன் பாதுகாப்பை உறுதி செய்தாலே நல்லாட்சியாளர்களாக தாங்கள் அடையாளப்படுத்தப்படுவோம் .அதுவே எதிர்காலத்தில் தனது கட்சிக்கும் ஆட்சிக்கும் தேவையான மக்கள் செல்வாக்கை தேர்தல் வெற்றியை தானே தேடித் தரும் என்ற அடிப்படை புரிதல் இல்லாமல் சுய விளம்பரமும் அரசியல் தம்பட்டமும் மட்டுமே தன்னை வெற்றிபெற வைத்துவிடும் என்ற மாயையில் தமிழக முதல்வர் சிக்கியிருக்கிறார்.

ஆட்சியாளர்களும் நிர்வாகிகளும் அவரவர் சுயநலம் மட்டுமே பிரதானம் என்று சுருங்கி விட்டதன் விளைவு தேசத்தின் எதிர்கால பொக்கிஷங்களாக விளங்கும் மாணவர்கள் பரிதவிக்கிறார்கள் . நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் தமிழக மாணவர்களுக்கு அதில் உள் ஒதுக்கீடு வேண்டும் .இதில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்று தேவையற்ற அரசியலையும் மலிவான அரசியல் குழப்பங்களையும் செய்வதை விட்டுவிட்டு உண்மையில் மாணவர்களின் நலனையும் அவர்களின் பன்முகத்திறன் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையிலான ஆக்கபூர்வமான முயற்சிகளை இனியும் மாநில பள்ளி கல்வித்துறை முன்னெடுக்க வேண்டும் . அதன் மூலம் மட்டுமே தமிழகத்தின் மாணவர்களின் கல்வித் திறனையும் மேம்படுத்த முடியும் . அரசு பள்ளிகளை மட்டுமே நம்பி இருக்கும் மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் மன உளைச்சல் இன்றி வாழவைக்க முடியும். இந்த மன அமைதியையும் நிம்மதியையும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்குவது மாநில அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கடமை . அதை இனியேனும் அவர்கள் உணர்ந்து செயல்பட்டால் அவர்கள் சார்ந்த கட்சிக்கும் ஆட்சிக்கும் நலம் பயக்கும்.


Share it if you like it