ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் இருந்து போர்க்குரல் எழுப்பிய மாவீரர்கள் மருது சகோதரர்கள் !

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் இருந்து போர்க்குரல் எழுப்பிய மாவீரர்கள் மருது சகோதரர்கள் !

Share it if you like it

சிவகங்கை பகுதியை ஆண்ட வேலுநாச்சியார் அரசியின் படை தளபதியாக இருந்து, சிவகங்கை மண்ணை ஆண்டவர்கள் மருது சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட மருது பாண்டியர்கள் 1758 முதல் 1801 வரை தங்களது போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்திருந்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் இதனை முறியடித்தனர். 1801ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி சிவகங்கையின் திருப்பத்தூரில் இவர்கள் தூக்கிலிடப்பட்டனர். 3 நாட்கள் கழித்து இவர்களது சடலங்கள் இவர்கள் கட்டிய காளையார் கோவிலுக்கு எதிர்புறம் அடக்கம் செய்யப்பட்டது. மருது சகோதரர்களின் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் 24ஆம் தேதி அரசு விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மருதுபாண்டியர்கள் நினைவாக காளையார் கோயிலில் நினைவு மண்டபம் கட்டப்பட்டது. ஆண்டுதோறும் அக்டோபர் 27ஆம் தேதி மருது பாண்டியர் குருபூஜை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வரும் 27ஆம் தேதி குரு பூஜை நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருதுபாண்டியர்கள் குரு பூஜையை முன்னிட்டு சிவகங்கை காளையார்கோவிலில் அவர்களது உருவச்சிலைக்கு மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கானோர் அப்பகுதியில் திரண்டனர்.


Share it if you like it