சொத்துகுவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி டி.கே சிவக்குமார் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த  கர்நாடக உயர்நீதிமன்றம் !

சொத்துகுவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி டி.கே சிவக்குமார் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் !

Share it if you like it

கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் மீதான வழக்கு 2013 மற்றும் 2018 க்கு இடையில் அவரது சொத்துக்கள் அளவுக்கதிகமாக அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நேரத்தில், சிவக்குமாரின் சொத்து சுமார் ஐந்து மடங்கு அதிகரித்து, 34 கோடியிலிருந்து 163 கோடியாக அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

2013 சட்டமன்றத் தேர்தலுக்கான அவரது பிரமாணப் பத்திரத்தில், காங்கிரஸ் தலைவரின் குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ. 251 கோடி என்றும், 2018 ஆம் ஆண்டு பிரமாணப் பத்திரத்தில், அவரது உறவினர்கள் வைத்திருந்த சொத்து மதிப்பு ரூ.840 கோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவகுமார் தனது ஆண்டு வருமானம் ரூ.14.24 கோடி என்றும், அவரது மனைவியின் ஆண்டு வருமானம் ரூ.1.9 கோடி என்றும் அறிவித்தார்.

இந்த வழக்கை அமலாக்க இயக்குனரகம் மற்றும் வருமான வரித்துறையும் விசாரித்து வந்தது. 2019 ஆம் ஆண்டு பணமோசடி வழக்கு தொடர்பாக கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமாரை ED கைது செய்திருந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு மாதம் கழித்து அவருக்கு ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவரும், கர்நாடக துணை முதல்வருமான டி.கே.சிவகுமாருக்கு மற்றொரு பின்னடைவாக, அவர் மீதான சிபிஐயின் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை ரத்து செய்யக் கோரிய அவரது மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (அக்டோபர் 19) தள்ளுபடி செய்தது.


Share it if you like it