சரத்பவாருக்கு பதிலடி கொடுத்த பிரபல இயக்குனர்!

சரத்பவாருக்கு பதிலடி கொடுத்த பிரபல இயக்குனர்!

Share it if you like it

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு ’தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்பட இயக்குனர் பதிலடி.

பிரபல திரைப்பட இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி ’காஷ்மீரில் நிகழ்ந்த கொடூரங்களையும், அட்டூழியங்களையும் மையமாக வைத்து ”தி காஷ்மீர் பைல்ஸ்” என்ற திரைப்படத்தை எடுத்தவர். இப்படம், இந்தியா முழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக, ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் அப்பாவி பண்டிட்கள், இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் அனுபவித்த கொடுமைகளை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், ஜாதி மதம் மற்றும் அரசியலை கடந்து இத்திரைப்படம், இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

இந்தப் படத்தை பார்த்துவிட்டு ஏராளமான ஹிந்துக்கள் கண்ணீர் வடித்திருக்கிறார்கள். இதுதவிர, காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெண், இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரியை கட்டிப் பிடித்துக் கொண்டு கதறி அழுத சம்பவத்தை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். இப்படத்திற்கு, ஹரியானா மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வரி விலக்கு வழங்கி இருந்தன. அந்த வகையில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கும் வரிவிலக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் டெல்லி முதல்வரிடம் கோரிக்கை வைத்து இருந்தனர். வரிவிலக்கு வேண்டும் என்றால், யூ டியூப்பில் வெளியிடுங்கள் என்று நக்கலாக சட்டசபையில் பதில் அளித்து இருந்தார். முதல்வரின் இந்த கருத்து ஹிந்து பண்டிகள் மற்றும் சிறுபான்மை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அந்த வகையில், தி.மு.க கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் ’தி காஷ்மீர் பைல்ஸ்’ குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்துக்களுக்கு எதிரான கொடுமைகளை சுட்டிக்காட்டும் திரைப்படத்தை (தி காஷ்மீர் பைல்ஸ்) ஒருவர் தயாரித்து இருக்கிறார். பெரும்பான்மையினர் எப்பொழுதுமே சிறுபான்மையினரைத் தாக்குகிறார்கள், அதே பெரும்பான்மை முஸ்லீம்கள் இருக்கும்போது, ஹிந்து சமூகம் பாதுகாப்பற்றது போல் இருப்பதாக (இத்திரைப்படம்) சித்தரிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த படத்தை விளம்பரப்படுத்தியது துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்து இருந்தார். .

இதற்கு ’தி காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் கொடுத்த பதிலடி இதோ; அந்த நபரின் பெயர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி. சில நாட்களுக்கு முன்பு உங்களை விமானத்தில் சந்தித்தவர். உங்கள் மற்றும் உங்கள் மனைவியின் பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றவர். நீங்கள் அவரையும் அவர் மனைவியையும் ஆசீர்வாதம் செய்தீர்கள். மேலும், காஷ்மீரி இந்து இனப்படுகொலை பற்றிய சிறந்த திரைப்படத்தை உருவாக்கியதற்காக அவர்களை வாழ்த்தினீர்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.


Share it if you like it