லஞ்சம் கொடுக்காததால் செருப்பால் அடித்து, குழந்தையை கொன்று போஸ்ட்மார்ட்டம் செய்து விடுவேன் என்று மிரட்டிய செவிலியர் – அரசு மருத்துவமனையில் கொடூரம் !

லஞ்சம் கொடுக்காததால் செருப்பால் அடித்து, குழந்தையை கொன்று போஸ்ட்மார்ட்டம் செய்து விடுவேன் என்று மிரட்டிய செவிலியர் – அரசு மருத்துவமனையில் கொடூரம் !

Share it if you like it

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி சிந்து. நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த 19ஆம் தேதி பிரசவத்திற்காக பிரசவத்திற்காக மணமேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்று இரவே அவருக்குப் பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

இந்தநிலையில், அந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் அமுதா என்ற செவிலியர், சரவணன் மற்றும் அவரது உறவினர்களைக் கடுமையாகப் பேசும் காட்சிகளும், அதே போல் சரவணன், செவிலியர் அமுதாவைக் கடுமையாகப் பேசும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனையடுத்து செவிலியர் அமுதா மீது சரவணன் மணமேல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், “இன்று எனது குழந்தையைப் பார்க்க அரசு மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு பணிபுரிந்து வரும் அமுதா என்ற செவிலியர் என்னிடம் 5 ஆயிரம் ரூபாய் பிரசவம் பார்ப்பதற்காக லஞ்சமாகக் கேட்டதாகவும், அதில் தன்னிடம் இருந்த 3ஆயிரம் ரூபாயை மட்டும் கொடுத்ததாகவும் மீதி இருந்த 2000 ரூபாய் லஞ்சம் கொடுக்காததால் நீ எல்லாம் எதற்காக இங்கே வருகிறாய் என்று என்னைப் பற்றியும் எனது மனைவியைப் பற்றியும் தகாத வார்த்தையில் ஆபாசமாகப் பேசினார். அத்துடன் என்னை செருப்பால் அடித்து கழுத்தைப் பிடித்துத் தள்ளியதோடு, எனது குழந்தையை கொன்று போஸ்ட்மார்ட்டம் செய்து விடுவேன் எனவும் மிரட்டினார்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ’காவல்துறையிடம் புகார் கொடுத்தால் உன் மனைவியையும், குழந்தையையும் அறுத்து விடுவேன்’ எனவும் பொதுமக்கள் முன்னிலையில் மிரட்டியதாகக் காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமும் ஆய்வு நடத்துவதாக கூறி நாடகமாடும் அமைச்சர் சுப்ரமணியன் அவர்கள் இதுபோன்ற ஏழை எளிய மக்களை மனதில் கொண்டாவது நிர்வாக சீர்கேடுகளை களைய வேண்டும் என்பதை மக்கள் கோரிக்கையாக வைத்துள்ளனர்.


Share it if you like it