பெட்ரோல் குண்டு வீசி நாடகம் குற்றவாளியை கைது செய்த போலீசார்

பெட்ரோல் குண்டு வீசி நாடகம் குற்றவாளியை கைது செய்த போலீசார்

Share it if you like it

கடந்த வாரம் கும்பகோணம் எதிர் வீட்டில் இருப்பவர்களை பழிவாங்க தனது வீட்டிற்கு தாமே பெட்ரோல் குண்டு வீசி பொய்யாக நாடகமாடிய நபரை போலீசார் கைது செய்துள்ளார்கள். அவரிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள் .அதன் பின்னணி என்ன குற்றத்திற்கான முகாந்திரம் என்ன என்பது அடுத்தடுத்த விசாரணை அறிக்கைகளில் வெளிவரும் ஆனால் இதைப் பற்றிய விவாதங்களை தமிழக ஊடகங்களிலோ அல்லது மூத்த ஊடகவியலாளர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக் கொள்ளும் நபர்களிடமிருந்து இதுவரையில் எந்த கருத்துக்களும் விவாதங்களும் பார்க்கவோ கேட்கவோ முடியவில்லை. சொல்லி வைத்தார் போல் அத்தனை பேரும் இந்த விஷயத்தை அமைதியாக கடந்து போகிறார்கள்.

ஒரு குற்றம் நடந்திருக்கிறது. அதை விசாரணையில் கண்டறிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரிக்கிறார்கள். அந்த வகையில் முழுமையான விசாரணை தகவல்கள் வெளிவரும் வரை அதைப்பற்றி விவாதிப்பதும் விமர்சனங்களை முன் வைப்பதும் நாகரீகமாக இருக்காது .அது விசாரணையின் போக்கை கூட மாற்றி அமைக்க கூடும் என்ற வகையில் பொறுப்பான மௌனம் காப்பார்கள் ஆனால் இந்த நிலைப்பாடு ஏன்? எல்லா தரப்பிலும் இல்லை .

சில மாதங்களுக்கு முன்பு அதே கும்பகோணம் அடுத்த திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக குடும்ப நண்பர் ஒருவரை சிகிச்சைக்கு அழைத்துப்போன ஒரு பாஜகவின் நிர்வாகி அங்கு அவருக்கு உரிய முதலுதவி சிகிச்சையோ அல்லது அவசர சிகிச்சையும் வழங்கப்படாமல் தாமதம் ஆனதால் கோபமுற்று அங்கு அந்தப் பணி அட்டவணையில் இருக்க வேண்டிய மருத்துவர் வராதது குறித்து கேள்வி எழுப்பினார். வேறு ஒரு மருத்துவர் வந்ததும் அவர் மருத்துவருக்கான அடையாளமோ உபகரணங்களோ இல்லாமல் குறைந்த பட்சம் நோயாளியின் அருகில் போய் கூட விசாரிக்காமல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு போங்கள் என்று அலட்சியமாக பதில் அளித்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து நீங்கள் யார் நீங்கள் தான் மருத்துவர் என்றால் அதற்குரிய அடையாள அட்டை என்ன அரசு பணியில் மருத்துவராக இருக்கும்பொழுது நீங்கள் அதற்குரிய உடையில் இல்லாமல் தவிர்ப்பதன் காரணம் என்ன என்று சட்ட ரீதியாக எழுப்ப வேண்டிய கேள்விகளை எழுப்பியதை மத ரீதியான பிரச்சனையாக கட்டமைத்து பூதாகரமாக்கி அந்த கேள்வி எழுப்பிய நபரை பெறும் மத துவேஷியாக விரோதியாக கட்டமைத்து தமிழக ஊடகங்கள் கால்களில் சலங்கை கட்டி ஆடியது.

ஆனால் அரசு மருத்துவமனையில் அந்த நேரத்தில் பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் இல்லாமல் போனதை பற்றியோ மாரடைப்பு என்னும் உயிர் ஆபத்தோடு போன ஒரு ஏழை சாமானியனுக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டதை பற்றியோ கேள்வி இல்லை. அரசு மருத்துவமனையில் இருக்க வேண்டிய மருத்துவர்கள் உயிர்காக்கும் உபகரணங்கள் மருத்துவர்கள் என்பதற்கான அடையாளங்கள் குறைந்தபட்ச உபகரணங்களோடு இல்லாமல் இருந்ததைப் பற்றியோ எந்த கேள்வியும் எழுப்பவில்லை. மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு போகும் வழியில் அவர் இறந்ததும் அவரை இழந்து ஒரு குடும்பம் பரிதவித்ததையும் பற்றி எந்த ஊடகங்களுக்கும் அக்கறையில்லை. இதற்கெல்லாம் காரணமான மருத்துவத்துறை அரசு மருத்துவ நிர்வாகம் சீரழிந்து கிடப்பதை பற்றி மாநில அரசுக்கு எந்த கோரிக்கையும் கேள்வியோ எழுப்பவில்லை.

ஊடகங்கள் தங்களை நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்வதும் ஊடகவியலாளர்கள் தங்களை குரலற்றவர்களின் குரல் என்று அடையாளப்படுத்திக் கொள்வதும் வெற்று அடையாளமாக இருக்கக் கூடாது . அதில் குறைந்தபட்ச உண்மையும் நேர்மையும் இருந்தால் மட்டுமே ஊடகத்தின் நடுநிலை தர்மம் மதிக்கப்படும். ஊடகவியலாளர்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் மக்கள் மத்தியில் பேசும் பொருளாகும். அந்த பேசும் பொருள் மட்டுமே அரசு எந்திரத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் .அந்த தாக்கம் தான் அரசாங்கத்தையும் மக்களையும் ஒருங்கிணைத்து ஒரு நல்லாட்சியை முன்னெடுக்கும். அதனால் தான் ஊடகங்களை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும் மரியாதையாக குறிப்பிடுகிறோம்.

இன்றைய நிலையில் ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண்களாக அல்ல. ஜனநாயகத்தின் மாண்பை சிதைக்கும் கரையான்களாக இருக்கிறது என்பதே உண்மை. சமகாலத்தில் தங்களின் சுயநலனுக்காகவும் பணம் பகட்டு சுய ஆதாயம் என்ற சுயநலம் அல்லது அந்நிய மதம் சித்தாந்தம் சார்ந்த தங்களின் நிலைப்பாடு என்ற ஏதோ ஒரு காரணம் கொண்டு ஒரு சார்பானவர்களாக தங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் போக்கை ஊடகங்கள் மாற்றிக் கொள்ளாத பட்சத்தில் எதிர்காலத்தில் ஊடகங்களை மக்கள் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் கடந்து போகும் புறக்கணிப்பு வரலாம் .அப்போது அரசு எந்திரமும் ஆட்சியாளர்களும் இந்த ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் முற்றாக ஒதுக்கும் நிலை வரும். ஊடகங்களுக்கு அப்படி ஒரு நிலை வருமானால் அதற்கு இன்றைய ஊடக வேளாளர்களின் வன்மமும் ஒரு சார்பும் ஒழுங்கீனமான ஊடக தர்மமும் பொறுப்பற்ற தனிமனித ஒழுக்கம் இல்லாத அவர்களின் செயல்பாடுகளும் மட்டுமே காரணமாக இருக்கும் .இதை ஊடகங்கள் உணர்ந்து நடந்து கொள்வது அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த ஊடகத்திற்கும் நன்மை தரும்.


Share it if you like it