கேரளாவை அடுத்து தமிழகத்தில் தான் கிறிஸ்தவ மிஷநரிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருப்பதால். கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படைவாதிகளின், ஆதிக்கம் மிகுதியாக இருக்கும், என்று பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில். கடலூர் மாவட்டத்தில் ‘சர்ச்’ தொடர்பாக பிரச்சனை ஒன்று கிளம்பியுள்ளது குறித்து காண்போம்.
திடீர் என்று முளைத்த ’சர்ச்’ பிரச்சினை தொடர்பாக நேற்று, அளித்த புகார் மனுவின் பேரில் இன்று காலை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் காவல்துறை உதவி ஆய்வாளர் அவர்கள் விசாரணை மேற்கொண்டார்.
சட்டத்திற்குப் புறம்பாக ”சர்ச்” (கட்டிடம்) கட்டப்பட்டுள்ளது என்று தெரிய வந்தது. இதனை அடுத்து நாளை மாலைக்குள், கட்டிடத்தில் உள்ள அனைத்து மத சின்னங்களையும் உடனே அகற்றுகிறோம். மேற்கொண்டு எந்த விதமான மத வழிபாடுகளையும், இனிமேல் நாங்கள், மேற்கொள்ள மாட்டோம். என்று எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இதன் பெயரில் தற்காலிகமாக எங்கள் போராட்டத்தை நிறுத்தி வைக்கிறோம் என்று முத்தாண்டிகுப்பம் பகுதியைச் சார்ந்த இந்து முன்னணியினர் தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.