சிக்கனில் இருந்த புழு : அலிப் பிரியாணியா உஷார் !

சிக்கனில் இருந்த புழு : அலிப் பிரியாணியா உஷார் !

Share it if you like it

சென்னை தாம்பரம் அருகே முடிச்சூரில் அலிப் பிரியாணி கடை ஒன்று உள்ளது. நேற்று ரேவதி என்பவரின் சகோதரர் அலிப் பிரியாணி கடையில் செட்டிநாடு சிக்கன் வாங்கி தன் குழந்தைக்கு சாப்பிட கொடுப்பதற்காக எடுத்து சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று பார்சலை பிரித்து பார்த்தவருக்கு பேரதிர்ச்சி. தன் குழந்தைக்காகக் ஆசை ஆசையாய் வாங்கி வந்த சிக்கனில் உயிரோடு புழு ஒன்று இருந்துள்ளது. இதனை வீடியோ எடுத்து கடை உரிமையாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த உரிமையாளர் சிக்கனில் புழு இருந்ததா ? நீங்க சாப்பிடல தான ? என்று சொல்லிவிட்டு அந்த பார்சலில் உள்ள புழுவை எடுத்துவிட்டு சிக்கன் வாங்க கடைக்கு வந்த மற்றொருவருக்கு அந்த பார்சலை கொடுத்துள்ளதாக ரேவதி கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரேவதி மேலும் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அவர்களுடன் விவாதம் செய்துள்ளார். இதனை அடுத்து கடையின் உரிமையாளர் கடை முழுவதையும் சுத்தம் செய்ய ஆரம்பித்து ஓடாத பிரிட்ஜில் உள்ள பழைய சிக்கன்களை எல்லாம் குப்பை தொட்டியில் போடுகிறார். இதனையும் ரேவதி வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அவர்களை சமாதானம் செய்ய பணம் பேரம் பேச முயன்றுள்ளார். ஆனால் ரேவதி பணம் வாங்க மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு புகார் அளித்தோம். ஆனால் அவரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று ரேவதி கூறினார். இதுதொடர்பாக காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக கடை உரிமையாளர், கமால் பாட்ஷா கூறியதாவது :-

என் பேரு கமால் பாட்ஷா. நான் 19 வருஷமா இங்க கடை நடத்திட்டு வரேன். இதுவரைக்கும் கம்பளைண்ட் வந்ததே கிடையாது. இதுதான் முதலைமுறை. இதை வேணும்ன்னே யாரோ பண்ணியிருக்காங்க. இன்னைக்கு வெள்ளிக்கிழமை நான் பொய் சொல்லமாட்டேன். அன்னைக்கு வாங்குன சிக்கன் தான் அது. அதுல எப்படி புழு வந்துச்சுனு தெரியல. இதுவரையும் யாரும் கம்பளைண்ட் பண்ணது இல்ல. நாங்க மன்னிப்பு கடிதம் எழுதி குடுத்துருக்கோம்.கடையை சுத்தமா வச்சிக்கோங்க அப்படினு அதிகாரிகள் சொல்லிட்டு போய்ட்டாங்க.


Share it if you like it