அமைதிப்படை அமாவாசை: அமைச்சருக்கு தியாகராஜன் மரண பதிலடி!

அமைதிப்படை அமாவாசை: அமைச்சருக்கு தியாகராஜன் மரண பதிலடி!

Share it if you like it

தி.மு.க அமைச்சருக்கு பா.ஜ.க மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் மரண பதிலடி

தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் தா.மோ. அன்பரசன். இவர், சில தினங்களுக்கு முன்பு தி.மு.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், அண்ணாமலை ஒரு பொறுக்கி. ஐ.பி.எஸ் ஆக இருந்த போது ரவுடிகளை சிறையில் அடைத்தவர் தற்போது ரவுடிகளை கட்சியில் சேர்த்து வருகிறார் என மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

தி.மு.க.வின் ஊழலை ஒவ்வொன்றாக தொடர்ந்து அண்ணாமலை நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார். இதன்காரணமாக, விடியல் அரசின் உண்மையான சுயரூபத்தை மக்கள் எளிதில் புரிந்து கொள்கின்றனர். அந்தவகையில், தி.மு.க.வினர் மத்திய அரசு மற்றும் பா.ஜ.க. தலைவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்தவகையில், தி.மு.க தலைமை கொடுத்த கிரீன் சிக்னல் காரணமாகவே அமைச்சர் அன்பரசன் இவ்வாறு பேசியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுதவிர, ஒரு அமைச்சரின் பொறுப்பற்ற செயலுக்கு பொதுமக்களும் நெட்டிசன்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் தான், பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் துணை மேயரும் பா.ஜ.க மாநில செயலாளருமான கராத்தே தியாகராஜன் அமைச்சரின் விமர்சனத்திற்கு தக்க பதிலடியை கொடுக்கும் விதமாக காணொளி ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியதாதவது;

அமைச்சர் தா.மோ. அன்பரசன் பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையையும் தரக்குறைவாக பேசுவதை நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கிறேன். பாஜக ஆளும் 17 மாநிலங்களின் ஜெயிலையும் பார்க்க தயாராக இருங்கள். சீக்கிரம் திகார் ஜெயிலை பார்க்க ரெடியாக இருங்கள். பெட்டி படுக்கையுடன் ரெடியாக இருங்கள். தமிழக போலீசை நம்பி நீங்கள் இவ்வளவு பேசும்போது சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத் துறை போன்றவற்றை வைத்துக்கொண்டு நாங்கள் எவ்வளவு பேசலாம்? மூன்று கேட்டகிரியில் எங்களுக்கும் பேசத் தெரியும். பாஜக தலைவர் அண்ணாமலையை பற்றி தரக்குறைவாக பேசினால், நாங்களும் அதே பாஷையில் பதிலடி தருவோம். எங்களுக்கும் ஏ, பி, சி என, மூன்று கேட்டகரியிலும் பேசத் தெரியும். திமுக தலைவர் ஸ்டாலினிடம் போய் கேட்டு பாருங்கள். தி.மு.க.வை சமாளித்து தான் இங்கு அமர்ந்திருக்கிறோம். மரியாதையாக அமைச்சர் மாதிரி பேசுங்கள் அமைதிப்படை அம்மாவாசை போல் நடந்து கொள்ள வேண்டாம் என இக்காணொளியில் தெரிவித்துள்ளார்

அதன் லிங்க் இதோ.


Share it if you like it