ஆபாச பேச்சாளர் லியோனியை விரட்டியடித்த மலேசிய தமிழர்கள்!

ஆபாச பேச்சாளர் லியோனியை விரட்டியடித்த மலேசிய தமிழர்கள்!

Share it if you like it

தி.மு.க. ஆபாச பேச்சாளர் திண்டுக்கல் லியோனியை மலேசிய தமிழர்கள் விரட்டியடித்த காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் திண்டுக்கல் லியோனி. இவர், மலேசியாவில் பட்டிமன்ற நிகழ்ச்சிக்காக சென்று இருக்கிறார். அந்த வகையில், பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் ஏராளமான மலேசிய தமிழர்கள் குழுமி இருக்கின்றனர். எனினும், நேரம் செல்ல செல்ல லியோனி வந்ததாக தெரியவில்லை.

இதனால், கோவமடைந்த தமிழர்கள் அரங்கில் இருந்து வெளியேறியதாக சொல்லப்படுகிறது. மக்கள் வெளியேறுவதை கண்டு விழா ஏற்பாட்டாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில், இரண்டு மணி நேரம் கழித்து தாமதமாக லியோனி அரங்கிற்கு வந்துள்ளார். அப்போது, அரங்கில் இருந்த சிலர் லியோனியை அரங்கின் வாசலிலேயே வழிமறித்து கடும் வாக்குவாதம் செய்து இருக்கின்றனர். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது. தி.மு.க.வின் ஆபாச பேச்சாளருக்கு இந்த நிலைமையா? என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it